
தோற்றம், நம்பிக்கை, அடையாளம், வசீகரம், மரியாதை போன்றவற்றைக் கொண்டு தென்னிந்திய மாநிலங்களான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் குறித்து இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக தமிழில் 6 நடிகர்களும், தெலுங்கில் இருந்து 6 நடிகர்களும், மலையாளத்தில் 4 நடிகர்களும், 2 கன்னட நடிகர்களும் என மொத்தம் 18 நடிகர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வு கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி டிசம்பர் வரை நடைபெற்றது. இதில் நடிகர் தென்னிந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் முதலிடம் பிடித்தார். மலையாளத்தைப் பொறுத்தவரை துல்கர் சல்மானும், ஃபகத் ஃபாசிலும் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தமிழில் சூர்யாவுக்கு அடுத்து விஜய் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.
நம்பிக்கைக் குரிய நடிகர், நடிகர், மரியாதைக்குரிய நடிகர், பிரபலமான தோற்றம் கொண்ட நடிகர் என அனைத்திலும் தென்னிந்திய அளவில் சூர்யா முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நம்பிக்கைக்குரிய நடிகர்களாக தெலுங்கில் அல்லு அர்ஜுனும் விஜய் தேவரகொண்டாவும், தமிழில் சூர்யாவுக்கு அடுத்து விஜய்யும் சிவகார்த்திகேயனும் மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் அறியப்படுகின்றனர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே போல பிரபலமான நடிகர் என்ற பட்டியலில் சூர்யாவுக்கு அடுத்து தெலுங்கில் பிரபாஸ் மற்றும் ராம் சரணும், தமிழைப் பொறுத்தவரை விஜய்யும் விஜய் சேதுபதியும் கன்னடத்தில் யஷ்ஷும், மலையாளத்தில் பிருத்விராஜும் உள்ளனர். ஈர்க்கக்கூடிய நடிகர் என்ற பிரிவில் சூர்யா முதலிடத்தில் இருக்க, தெலுங்கில் அல்லு அர்ஜுனும், விஜய் தேவரகொண்டாவும், தமிழில் விஜய்யும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் உள்ளனர்.
அதிக மரியாதைக்குரிய நடிகர் என்ற பிரிவில் ஒட்டுமொத்தமாக சூர்யா முதலிடத்தில் இருக, தெலுங்கில் மகேஷ் பாபுவும் ஜுனியர் என்டிஆரும், தமிழில் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயனும் முன்னணியில் உள்ளனர். கன்னடத்தில் யஷ் முன்னணியில் இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.