
பழனி: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. பழனி முருகன் கோயிலில் இன்று மாலை வேள்வி பூஜைகள் தொடங்கவுள்ளது. நவீன மின் இழுவை ரயில் பெட்டி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். பழைய இழுவை ரயிலில் அதிகபட்சம் 40 பேர் வரை பயணிக்க முடியும். புதிய இழுவை ரயில் பெட்டியில் அதிகபட்சம் 70 பேர் பயணிக்கலாம்.