
குளிர்காலம் வந்துவிட்டாலே தாவரம் முதல் மனிதன் வரை குளிரை சமாளிக்க என்னென்னவோ செய்கிறோம். மனிதனை விட விலங்குகளுக்கு கடினமான சூழ்நிலைகளில் உயிர்வாழ சில உடல் தகவமைப்பு பண்புகள் இயற்கையாகவே அதிகம் உள்ளன. உதாரணமாக கரடியை எடுத்துக்கொண்டால் கடும் குளிர் காலம் வரை தூங்கும்.
தூங்கும் போது பொதுவாகவே உடல் வெப்பநிலை, சுவாசம், இதயத் துடிப்பு குறையும். இதனால் வளர்சிதை மாற்றமும் குறைவாக இருக்கும். இப்படி இருக்கும் போது சாதாரண செயல்பாடுகளை விட உடல் குறைவாக வேலை செய்யும். இதனால் கரடி யின் ஆயுள் கொஞ்சம் நீளும்.
பறவைகளைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் இறகுகளை வளர்க்கின்றன. அது தரும் வெதுவெதுப்பால் பறவையில் உடல் சூடாக இருக்கிறது. மேலும் குளிர்காலத்தின் போது வெப்ப மண்டலத்திற்கு இடம்பெயரவும் இந்த கூடுதல் சிறகுகள் உதவுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பறவை இனம் தன்னை பாதுகாத்து கொள்ள மூளை திசுக்களை வளர்க்கின்றன.
உள்ளங்கை அளவிலான கருப்பு-தலை சிக்கடி (கருப்பு மூடிய சிக்கடி) எனும் பறவை வடக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு கனடாவின் பெரிய பகுதிகளில் காணப்படுகிறது. இது தூங்கும்போது இறகுகளுக்குப் பதிலாக மூளை திசுக்களை வளர்க்கின்றன. இந்த கூடுதல் மூளை திசுக்கள், உணவுப் பொருளைப் புதைத்து வைத்த இடத்தை பறவைக்கு ஞாபகப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் பசி எடுக்கும் போது, பறவை இந்த புதைகுழிகளுக்குத் திரும்புகிறது.
சில கருப்பு-தலை சிக்கடி குஞ்சுகள் புதிய நரம்பு செல்களைச் சேர்த்து மூளையை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வரை கூடுதலாக வளர்க்கிறது. இதனால் உணவு புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இடங்களை நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய மருத்துவ நூலகத்தின் (NLM) படி , இந்த பறவைகளுக்கு இயற்கையாகவே மூளையின் நினைவக பகுதியான ஹிப்போகாம்பஸ்ஸுக்கு தனது அளவை அதிகரிக்கும் இயல்பு உள்ளது. சிக்கடீ பறவையின் ஹிப்போகாம்பஸ் தான் அதன் துல்லியமான வேட்டையாடல் மற்றும் உணவைச் சேமிக்கும் அறிவை வழங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: