
கடும் போட்டி
டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு மின்சார வாகன நிறுவனங்களும் விலைபோரை தூண்டியுள்ளது. இது மேலும் நிறுவனத்திற்கு அழுத்தத்தினை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் நிறுவனம் செலவினங்களை சமாளிக்க இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் பாதிப்பு
நிறுவனம் இந்தப் பணி நீக்க திட்டத்தில் பிராடக்ட் டெவலப்மெண்ட் பிரிவில் 2500 பேரையும், 700 நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களையும், ஆக மொத்தம் 3,200 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் இந்த பணி நீக்கத்தில் ஜெர்மன் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில் இருந்தும் வெளியேற்றம்
எனினும் போர்டு நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துக்களை வெளியிடவில்லை. தொடர்ந்து சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், போர்டு நிறுவனம் படிப்படியாக தனது மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதனை திட்டமிட்டு, செலவு குறைப்பு மத்தியில் தான் இந்தியாவில் இருந்தும் கூட வெளியேறியது.

மறுசீரமைப்பு திட்டம்
இதற்கிடையில் தற்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிறுவனம், தேவையில்லாத கூடுதல் ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டு, தேவையானவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டிருக்கலாம். இதற்கிடையில் தான் இந்த மறுசீரமைப்பு திட்டத்தினையும் போர்டு நிறுவனம் கையில் எடுத்திருக்கலாம்.

முதலீட்டு திட்டம்
போர்டு நிறுவனம் கடந்த ஆண்டே தனது மின்சார வாகன உற்பத்திக்காக 2 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தது. இதன் முலம் மின்சார வாகன சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போர்டு திட்டமிட்டுள்ளது. தற்போது போர்டு பியாஸ்டா நல்ல செயல்பாட்டில் உள்ளது.

எதிர்கால திட்டம்
போர்டு நிறுவனத்தில் அதன் ஐரோப்பிய பகுதிகளில் சுமார் 45,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் 7 மின்சார வாகனங்களையும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பேட்டரி அசெம்பிளி செய்யும் ஆலையும், இது தவிர மற்ற உதிரி பாகங்களுக்கான ஆலையையும் துருக்கியில் கூட்டணியாக திட்டமிட்டுள்ளது.

முன்பே கணித்த நிறுவனம்
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து 1.2 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இது அடுத்த தலைமுறை வாகனங்களுக்கு திட்டமிடவில்லை என்பது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் வேலை குறைப்பு இருக்கலாம் என கடந்த ஆண்டே நிறுவனம் கூறியுள்ளது. ஏனெனில் மின்சார வாகனங்களுக்கான அசெம்பிளிங்கிற்கு குறைவான நேரமே தேவை. ஆக பணி நீக்கம் இருக்கலாம் என்று கணித்து இருந்தது நினைவுகூறத்தக்கது.