
தமிழர்கள்தான் எப்போதும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதே அளவுக்கு விருந்தினர்களை உபசரிப்பதில் ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள். விருந்தினர்களுக்கே செம கவனிப்பு என்றால் புது மருமகனுக்கு எத்தகைய வரவேற்பு, உபசரிப்பு அங்கு இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரித்வி குப்தா என்பவர் சங்கராந்தியை முன்னிட்டு மனைவி ஹாரிகாவுடன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். மகளையும், மருமகனையும் ஹாரிகாவின் தந்தை நாக பத்ரிலட்சுமி நாராயணா, தாய் சந்தியா ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். திருமணம் ஆனபின் சங்கராந்தியை முன்னிட்டு முதல்முறையாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகனை அசத்த முடிவு செய்த சந்தியா, உறவினர்கள் உதவியுடன் 173 வகையான உணவுகளை தயார் செய்தார்.
https://tamil.news18.com/news/madurai/madurai-palamedu-jallikattu-2023-live-updates-pongal-jallikattu-tamilnadu-january-16-873149.html
சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல், அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, பூந்தி, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று பட்டியல் நீண்டது. உணவுகளை தயார் செய்த மாமியார் சந்தியா அவற்றை மருமகனுக்கு மகளுக்கும் பரிமாறினார்.
இத்தனை உணவுகளையும் சாப்பிட வேண்டுமா என்று மனைவி ஹாரிகாவிடம் ப்ரித்வி கேட்டார். கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனைவி கூற மாமியார், மாமனார் பார்த்து கொண்டிருக்க புது மருமகன் 173 வகை உணவுகளிலும் கொஞ்சம் எடுத்து ருசி பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.