
சமீபத்தில் இன்ஸ்டா quiet mode என்ற புதிய அம்சத்தை வெளியிட்டது. தற்போது இந்த அம்சம் அமெரிக்கா, யுனைடெட் கிண்டம், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள யூஸர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதிய அம்சம் யூசர்களின் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களுடன் லிமிட்டாக இருக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மோடை ஆன் செய்துவிட்டால் ஃபிரெண்ட்ஸ் & ஃபாலோயர்ஸ்களிடம் இருந்து வரும் அதிகமான நோட்டிஃபிகேஷன்ஸ் ஹைட் செய்யப்பட்டு விடும். இதனால் கவனம் சிதறாமல் நம்மால் இருக்க முடியும். யூஸர்கள் இதை இயக்கிய பிறகு எந்த புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ்களையும் பெற மாட்டார்கள். இன்ஸ்டாப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் வகையில் இந்த அம்சம் உள்ளது.