
கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரிய அளவில் அறியப்படாத பலர் இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் இருளர் சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. எந்த வித கல்வி அறிவுமின்றி, உலகம் முழுவதும் சுற்றி, பல விஷ பாம்புகளை இருவரும் நேர்த்தியாக பிடித்து, விஷ முறிவு துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகின்றனர்.
இவர்கள் தவிர திருமணமே செய்யாமல், தனது வாழ்க்கையையே சமூக சேவைக்கு அர்ப்பணித்த ஓய்வுபெற்ற நூலகரான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறையைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்
நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமடைந்த இசையமைப்பாளர் மரகதமணி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதி ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதேபோல ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.