
இதனால் எப்படியாவது மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும் எந்த பலனும் கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு சிறந்த வழி தோட்டக்கலை என்கின்றது ஆய்வுகள். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியால் நிதியளிக்கப்பட்ட புதிய கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் (CU) சார்பில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சமூகத் தோட்டக்கலையில் ஈடுபடுவது, பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாது, அவர்களுக்கு மன அமைதியையும், உடற்தகுதியுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.