
சௌர்யா உர்ஜா நிறுவனம்
ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் IL&FS எனர்ஜி டெவலப்மென்ட் நிறுவனம் இணைந்து 50:50 என்ற கூட்டணியில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் சௌர்யா உர்ஜா நிறுவனம். இந்த நிறுவனம் ரினியூவபிள் எனர்ஜி திட்டங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ்
இந்த நிலையில் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் ராஜஸ்தான் மாநில அரசிடம் இருக்கும் வேலையில் 50 சதவீத பங்குகள் எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்தப் பங்குகளைத் தான் தற்போது அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட் வாங்குகிறது.

அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ
அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாங்கள் Essel Infraprojects Ltd உடன் ஒரு பிணைப்பு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளோம். இந்தச் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் ராஜஸ்தான் அரசிடம் தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 மெகாவாட் சோலார் பார்க்
ராஜஸ்தான் மாநிலத்தில் 750 மெகாவாட் திறன் கொண்ட சோலார் பார்க்-ஐ அதானி ரினியூவபிள் எனர்ஜி வைத்திருக்கிறது. இந்தத் தளத்தில் இருந்து 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் 9.87 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதல்-ஐ பெற்றுள்ளது.

அதானி ரினியூவபிள் எனர்ஜி
அதானி ரினியூவபிள் எனர்ஜி-இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 50 கோடி ரூபாய் மற்றும் செலுத்தப்பட்ட மூலதனம் 46.56 கோடி ரூபாய். டெவலப்பர்களால் ரினியூவபிள் எனர்ஜி உற்பத்தி ஆலைகளை அமைக்க அதானி சோலார் பூங்காக்களை உருவாக்கி வழங்குகிறது.

ராஜஸ்தான் மாநில வர்த்தகம்
இந்தக் கையகப்படுத்தல் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடையும். இந்த மாநிலத்தில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) ஏற்கனவே ராஜஸ்தான் மாநில அரசுடன் ஒரு கூட்டு நிறுவனத்தில் கீழ் சோலார் பூங்காவைச் சொந்தமாக வைத்து இயக்கி வருகிறது. இதன் கூட்டணி நிறுவனத்தின் பெயர் அதானி ரினியூவபிள் எனர்ஜி பார்க் ராஜஸ்தான் லிமிடெட். இது 2015 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

அதானி கிரீன் எனர்ஜி பங்குகள்
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3.72 சதவீதம் குறைந்து 2,085.50 ரூபாயாக உள்ளது. ஜனவரி மாதம் 18 நாட்களில் மட்டும் சுமார் 10.42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி கிரீன் எனர்ஜி பங்குகளின் 52 வார உயர்வு 3050.00 ரூபாய்.