
அதானி குழுமம்
அதானி குழுமம் அஜர்பைஜான் நாட்டில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் சுரங்கத் திட்டங்களில் முதலீடு செய்து அதற்கான ஆய்வை துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மாபெரும் வர்த்தகக் குழுமம் தனது வர்த்தகத்தை இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குக் கொண்டு செல்கிறது.

அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்
கௌதம் அதானி, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் கடந்த வாரம் டாவோஸில் சந்தித்ததாக அஜர்பைஜான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது அஜர்பைஜான் நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கும் தன்மையை விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.

அஜர்பைஜான் பொருளாதாரம்
மேலும் அஜர்பைஜான் நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் அந்நாட்டின் அரசும் அதானி குழுமமும் இணைந்து பெட்ரோகெமிக்கல், சுரங்கம் மற்றும் உலோகவியல் தொழில்களில் பணியாற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விரிவாக்கம்
கௌதம் அதானி துறைமுகங்கள் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட வர்த்தகக் கட்டமைப்பில் சமீபத்திய ஆண்டுகளில், விமான நிலையங்கள், டேட்டா சென்டர் மற்றும் சிமெண்ட் மற்றும் கிரீன் எனர்ஜி ஆகிய துறைகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது.

119.2 பில்லியன் டாலர்
கௌதம் அதானி 1988 இல் அதானி குழுமத்தை ஒரு டிரேடிங் கம்பெனியாக உருவாக்கி இன்று ரியல் எஸ்டேட், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி, பசுமை ஆற்றல், சிமெண்ட், நிலக்கரி மற்றும் FMCG எனப் பல துறைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கௌதம் அதானி சொத்து மதிப்பு 119.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச், கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களை “வெட்கக்கேடான” சந்தை கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழும நிறுவன பங்குகளை மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெரும் ஓட்டையைப் போட்டு உள்ளது.

அதானி மறுப்பு
இதேபோல் அதானி குழுமத்தின் கடன் இக்குழுமத்தை நிச்சயமற்ற நிதி நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றசாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ளது அதானி குழுமம், இதேபோல் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது.

CreditSights அறிக்கை
சில மாதங்களுக்கு முன்பு பின்ச் குரூப்-ன் கிளை நிறுவனமான CreditSights அதானி குழுமத்தை “ஆழமாக மிகைப்படுத்தியது” என்று வகைப்படுத்தியது மட்டும் அல்லாமல் கடன் மற்றும் பிற அபாயங்கள் உள்ளதாக அறிவித்து பின்பு கணக்கில் இருக்கும் திருந்தம் அறிவித்தாலும் தர மதிப்பீட்டை மாற்ற முடியாது என அறிவித்தது.

அன்னிய போர்ட்போலியோ கணக்குகள்
இதேபோல் 2021ல் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனத்தில் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி பங்குகள் வைத்திருக்கும் 3 அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்கை NSDL அமைப்பு முடக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.