
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இன்று அசோக் லேலண்ட் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பல்லார்ட் பவர் ஆகியவற்றுடன் மைனிங் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தும் கனரக வாகனங்களான லாரிகளை மாற்று எரிபொருளில் இயக்கும் புதிய திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

3 நிறுவன கூட்டணி
அதானி எண்டர்பிரைசஸ், அசோக் லேலண்ட், பல்லார்ட் பவர் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் செல் எலக்ட்ரிக் டிரக்கை (எஃப்சிஐடி) உருவாக்குவதற்கான பைலட் திட்டத்தை தொடங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

பல்லார்ட் நிறுவனம்
PEM எரிபொருள் செல் எஞ்சின் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் பல்லார்ட் நிறுவனம் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கும் டிரக்கிற்கான FCmoveTM பியூயல் செல் இன்ஜின்-ஐ வழங்குகிறது.

அசோக் லேலண்ட்
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்கும் அசோக் லேலண்ட், வாகனங்களைத் தயாரிக்கும் தளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன. இக்கூட்டணியில் உருவாகும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் எலக்ட்ரிக் டிரக் இந்தியாவில் 2023 இல் தொடங்கப்பட உள்ளது.

மைனிங் டிரக்
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் மைனிங் டிரக் 55 டன் எடையும், மூன்று ஹைட்ரஜன் டேங்குகளையும், 200-கிமீ வரையில் இயங்கும் ரேஞ்ச் கொண்டு இயங்கும். மேலும் இந்த டிரக் Ballard நிறுவனத்தின் 120 kW PEM பியூயல் செல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும்.

50 பில்லியன் டாலர்
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் ஏற்கனவே கிரீன் ஹைட்ரஜன் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக அமைப்புகளில் அடுத்த பத்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி எண்டர்பிரைசர்ஸ்
ஹைட்ரஜன் எரிபொருள் இயங்கும் சுரங்க டிரக்கை-ஐ ஆசியாவின் முதல் கூட்டணி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் சுரங்க தொழிலில் மட்டும் அல்லாமல் கிரீன் ஹைட்ரஜன் வாங்கவும், விற்கவும், பெட்ரோல் பங்குகளைப் போல ஹைட்ரஜன் நிலையங்களை உருவாக்கவும் உள்ளது.