
முதலிடம் யாருக்கு?
தரவரிசையின் படி, பிரெஞ்சு ஆடம்பரண்டான லூயிஸ் உயிட்டனின் நிறுவனர், பெர்னார்ட் அர்னால்டின் மொத்த சொத்து மதிப்பு 188 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், டெஸ்லாவின் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலராகவும், அமேசானின் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பானது 121 பில்லினர் டாலராகவும் உள்ளது.

டாப் 10 பில்லியனர்கள்
இதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பில்லியனர் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 84. பில்லியன் டாலராகவும் உள்ளது.
டாப் 10 பில்லியனர்களில் பெர்னார்ட் அர்னால்டு (188 பில்லியன் டாலர்), எலான் மாஸ்க் (145 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (121 பில்லியன் டாலர்), கெளதம் அதானி (120 பில்லியன் டாலர்), பில் கேட்ஸ் (111 பில்லியன் டாலர்), வாரன் பஃபெட் (108 பில்லியன் டாலர்) ), லாரி எலிசன் (99.5 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (92.3 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (88.7 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மர் (86.9 பில்லியன் டாலர்)

போர்ப்ஸ் பட்டியல்?
மறுபுறம் போர்ப்ஸ் பில்லியனர் லிஸ்டின் படி தொழிலதிபர் கெளதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னால்ட் அர்னால்டு முதலிடத்திலும், அவரை தொடர்ந்து எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், கெளதம் அதானி, பில்லியன் முகேஷ் அம்பானி 9வது இடத்திலும் உள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியல்?
போர்ப்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களில் பெர்னார்ட் அர்னால்டு, எலான் மாஸ்க், கெளதம் அதானி, ஜெப் பெசோஸ், லாரி எலிசன், வாரன் பபெட், பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் அவரது குடும்பம், முகேஷ் அம்பானி, லார்ஜி பேஜ்

என்ன செய்கிறார் அதானி?
இந்தியாவின் முன்னணி பணக்காரரான கெளதம் அதானி மின்சார உற்பத்தி, விமானத் துறை, கப்பல் துறைமுகங்கள், போகுவரத்து, புதுபிக்கத்தக்க, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், என பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியினை கண்டு வரும் அதானி, தொடர்ந்து பல்வேறு துறைகளில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.

சொத்து மதிப்பு அதிகரிப்பு
ஆக இனி வரும் ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு அதிகரிக்கலாம். குறிப்பாக இந்த காலத்தில் பல பில்லியனர்களின் மதிப்பானது பெரும் சரிவினைக் கண்ட நிலையில், அதானியின் சொத்து மதிப்பு பெரியளவில் அதிகரித்துள்ளது.