
அதானியின் நிகர மதிப்பு அதிகரிப்பு
சர்வதேச அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பெரும் சரிவைக் கண்டு அதானி, இன்று பங்கு விலை ஏற்றம் கண்ட நிலையில், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதிக லாபம் ஈட்டியவர்களில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

அதானி எண்டர்பிரைசஸ்
கடந்த ஜனவரி 17, 2023ல் அதானி குழுமம் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். எனினும் அவர் பின்னர் டாப் 20 இடத்திற்கு கீழாக தள்ளப்பட்டார்.
இதற்கிடையில் இன்று அதானி குழும பங்குகள் 25% வரையில் ஏற்றம் கண்டன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 25% அதிகரித்து, 1965.50 ரூபாயாக உச்சம் தொட்டது.

அதானி போர்ட்ஸ் & அதானி வில்மர்
இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.64% அதிகரித்து, 598.70 ரூபாயாக உச்சம் தொட்டது. அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி வில்மர் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அப்பர் சர்க்யூட் ஆகி 1324.45 ரூபாய் மற்றும் 399.40 ரூபாய் முறையே அப்பர் சர்க்யூட் ஆகி உச்சம் தொட்டிருந்தது.

மோசமான சரிவு
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியானதில் இருந்தே மிக மோசமான சரிவினைக் கண்ட அதானி குழும பங்குகள், இன்னும் கூட தெளிவான ஒரு கட்டமைப்புகள் வரவில்லை என்றே கூறலாம். எனினும் அதானி குழுமத்தின் தீவிரமான பல முயற்சிகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.

அதானி போர்ட்ஸ் லாபம்
இந்த ஏற்றம் இனி இப்படியே தொடருமா? இழந்த 118 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பினை எப்படி ஈடுகட்ட போகிறது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் டிசம்பர் 2022 காலாண்டில் 16% சரிவினைக் கண்டு, ஒருங்கிணைந்த நிகரலாபமாக 1315.54 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1567.01 கோடி ரூபாயாக இருந்தது.

அதானி டிரான்ஸ்மிஷன் லாபம்
இதே அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 77.8% அதிகரித்து, 474.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டி; 267.03 கோடி ரூபாயாக இருந்தது. சர்வதேச அளவில் மந்தமான நிலை இருந்து வரும் நிலையிலும்,நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளதாக அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

கெயினர்ஸ் பட்டியல்
அதானி மட்டும் அல்ல, கெயினர்ஸ் பட்டியலில் எலான் மாஸ்க் 3 பில்லியன் டாலர் மதிப்பை சேர்த்தும், தடாஷி யானாய் 78 மில்லியன் டாலரும், ரவி ஜெய்ப்ரியா 675 மில்லியன் டாலரும், லோ டக் குவாங் 648 மில்லியன் டாலரும் லாபம் ஈட்டியுள்ளனர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடம் பெற்றுள்ளார்.