
யாரு சாமி நீ..?!
இந்த அனைத்து சம்பவத்திற்கும் காரணம் Hindenburg Research என்னும் நிறுவனத்தின் அறிக்கை. Hindenburg Research நிறுவனத்தின் பணி என்ன..? இது யாருடைய நிறுவனம்..? இந்த நிறுவனத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் வாங்க மொத்த கதையையும் தெரிஞ்சிக்குவோம்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தையில் பெரிய பணத்தைப் பார்க்க சில வழிகள் உள்ளன, அதில் முக்கியமானது குறுகிய நிலை, மற்றொன்று நீண்ட இடுகை. இதில் Short Position என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என பிட்டிங் செய்து முதலீடு செய்வது, இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம்.

குறுகிய நிலை மற்றும் நீண்ட நிலை.
இதேபோல் Long Postion என்றால் பங்கு விலை பங்கு விலை உயரும் எனப் பிட் செய்து வாங்குவது இதில் பங்கு விலை உயர்ந்தால் மட்டுமே லாபம். இது இரண்டிலும் பங்குகளை நேரடியாக வாங்க முடியாது ஏற்கனவே நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து கடனாகப் பெற்று தான் வாங்க முடியும்.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி கெட்டி
இந்த இரண்டு குறுகிய நிலை, நீண்ட இடுகை முதலீட்டில் இருந்து விலகும் ஒரு நிறுவனம் தான் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி. ஆனால் Hindenburg Research இதில் சிறந்து விளங்க இது மட்டும் காரணம் இல்லை.

இது தான் ஸ்பெஷல்
இந்த நிறுவனம் முதலீட்டுச் சந்தையில் செய்யும் முறைகேடுகளை ஆய்வு செய்து தவறுகளைக் கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்குகிறது. இதை அடிப்படையாக வைத்து தான் குறுகிய நிலை, நீண்ட இடுகை முதலீடுகளைச் செய்து வருகிறது. ஹிண்டன்பர்க் கார்பரேட் நிறுவனங்கள் முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதில் பெரிய டிராக் ரெக்கார்டு வைத்துள்ளது.

அதானி குழுமம்
அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய மோசடி செய்த குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமத்தின் பங்குகளை FPO கீழ் விற்பனை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது பெரும் பின்னடைவாக உள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு லாபம்
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஹிண்டன்பர்க் பலன் அடையும். ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது அதானி குழும பங்குகள் மீது குறுகிய நிலையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாதன் ஆண்டர்சன்
2017 ஆம் ஆண்டு Nathan Anderson என்பவர் Hindenburg Research என்ற தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல், கிரெடிட், டிரைவேட்டிவ்ஸ் போன்ற துறைகளையும் ஆய்வு செய்கிறது.

முக்கியப் பணி
Nathan Anderson-ல் உருவாக்கப்பட்ட Hindenburg ஆராய்ச்சி நிறுவனம் கணக்கியல் முறைகேடுகள், தவறான நிர்வாகம் மற்றும் வெளியிடப்படாத நிதி பரிவர்த்தனைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நிதி மோசடிகளைத் தேடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கட்டமைப்பை வைத்துள்ளது.

நாதன் ஆண்டர்சன் கல்வி, பணி
நாதன் ஆண்டர்சன் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்ற பின்பு, Factset ரிசர்ச் சிஸ்டம்ஸ் இன்க் என்ற டேட்டா நிறுவனத்தில் நிதித்துறையில் தனது பணியைத் தொடங்கினார். இன்று உலக நிறுவனங்களை மிரட்டி வருகிறார்.

16 நிறுவனங்கள்
2017 முதல் சுமார் 16 நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டுபிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம். இதில் சமீபத்தில் மாட்டிய நிறுவனம் அமெரிக்காவின் எலக்ட்ரிக் ட்ராக் தயாரிப்பு நிறுவனமான Nikola Corp.

வீழ்ச்சி
சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புடைய Nikola Corp நிறுவனம் தற்போது வெறும் 1.34 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.. அப்போ நம்ம கௌதம் அதானி நிலைமை என்ன..? கமெண்ட் பண்ணுங்க.