
நியூசிலாந்து இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பின் ஆலன் 0 (5), டிவோன் கான்வே 7 (16), ஒன் டவுன் பேட்டர் ஹென்ட்ரி நிகோலஸ் 2 (20), அடுத்து டெரில் மிட்செல் 1 (3), டாம் லதாம் 1 (17) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் அடித்து, நடையைக் கட்டினார்கள்.
தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் 36 (52), பிரேஸ்வெல் 22 (30), சாண்ட்னர் 27 (39) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதால், நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108/10 ரன்களை எடுத்தது.
இந்திய இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 51 (50), சுப்மன் கில் 40 (53) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அடுத்து விராட் கோலி 11 (9), இஷான் கிஷன் 8 (9) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி 20.1 ஓவர்களில் 111/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நவம்பர் 1 ஒருநாள் அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. கடைசிப் போட்டி செவ்வாய் அன்று நடைபெறும்.
சுப்மன் கில்லுக்கு பட்டபெயர்:
முதல் இரண்டு போட்டிகளிலும் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். முதல் போட்டியில் 208 (149) ரன்கள் அடித்து, மேட்ச் வின்னராக இருந்த இவர், இரண்டாவது போட்டியில் 40 (53) ரன்கள் அடித்து, கடைசிவரை களத்தில் இருந்தார். இப்படி ஷுப்மன் கில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக அசத்தி வருவதால், இனி இவர்தான் ரெகுலர் ஓபனராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மன் கிலுக்கு பட்டா பெயர் ஒன்றை சூட்டியுள்ளார். ”சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறந்த ஓபனர் கிடைத்துவிட்டார். அவருக்கு ஸ்மூத்மேன் கில் என்ற பட்டபெயரை சூட்ட விரும்புகிறேன். இந்த பெயரை அவர் ஏற்றுக்கொள்வார் என உண்மையில்” எனக் கூறினார்.