
ஜனவரி டூ பிப்ரவரி
எக்னாமிக் டைம்ஸில் வெளியான செய்தியின் படி, அரசு பல்வேறு தகவல்கள் வெளியாகும் நாள் மற்றும் நேரத்தினை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய காலண்டரின் படி ஜனவரி மாதத்தில் கடைசி வேலை நாளுக்கு பதிலாக, பிப்ரவரி இறுதியில் பல தரவுகளானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன தரவுகள்
இந்தத் தரவில் தேசிய வருமானம், சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம், நுகர்வு மற்றும் செலவினங்கள், ஜிடிபி உள்ளிட்ட பலவும் இதில் அடங்கலாம் என தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்வதாக அறிவித்தது. இது முன்னதாக பிப்ரவரியின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டது.

ஏன் இந்த மாற்றம்
இந்த மாற்றம் 2023 – 24 பட்ஜெட் தாக்கலில் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்ற நிலையில் மாற்றம் கொண்டு வரவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக ஜிடிபி தரவானது பட்ஜெட்டுக்கு முந்தைய நாளான ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட தேதியில், மாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எதிர்பார்ப்பு
இதற்கிடையில் மார்ச் 2022ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான தரவானது 8.7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது 7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாமினல் ஜிடிபி விகிதமானது 2023ம் நிதியாண்டில் 15.4% ஆக இருக்கலாம் என்றும், இது 2022ல் 19.5% ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவிஏ விகிதம்
இதே ஜிவிஏ விகிதம் 2022 – 23ம் நிதியாண்டில் 6.7% ஆக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 8.1% ஆக இருந்தது. இது தவிர உற்பத்தி துறையின் உற்பத்தியானது 2022ம் நிதியாண்டில் 9.9% இல் இருந்து, 1.6% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான வளர்ச்சி விகிதமானது 2023ம் நிதியாண்டில் 9% ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022ம் நிதியாண்டில் 11.5% ஆக குறைந்துள்ளது.

சுரங்கத் துறையில் வளர்ச்சி
இதே சுரங்கத் துறையில் வளர்ச்சி விகிதமானது 2.4% ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 11.5% ஆக இருந்தது.
இதுமட்டும் அல்ல பல்வேறு துறைகளிலும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ஜிடிபியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜிடிபி தரவு வெளியாகும் நாளும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.