
தங்கம் & வெள்ளி விலை
எப்படியிருப்பினும் டாலர் மற்றும் பத்திர சந்தையானது மந்த நிலையில் இருக்கும் நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் உற்பத்தி குறித்த தரவு, தொழில்துறை வளர்ச்சியானது மேம்படும்போது அது வெள்ளியின் விலையினை ஊக்குவிக்கலாம். தங்கம் விலையினையும் ஊக்குவிக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்சூக்கு, 4.45 டாலர்கள் அதிகரித்து, 1947.05 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்சூக்கு சற்று அதிகரித்து, 23.968 டாலராகக் காணப்படுகிறது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்றும் மேலாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இன்று விடுமுறையாகும். ஆக இதன் தாக்கம் நாளை இருக்கலாம். எனினும் கடந்த அமர்வில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 57,005 ரூபாய் என்ற லெவலிலும், இதே வெள்ளி விலை கிலோவுக்கு 203 ரூபாய் அதிகரித்து, 68,745 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது நேற்று சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று கிராமத்திற்கு 35 ரூபாய் அதிகரித்து, 5380 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 43,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமத்திற்கு 38 ரூபாய் குறைந்து, 5793 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து, 58,930 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமத்திற்கு 1 ரூபாய் அதிகரித்து, 75 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 75,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: கிரேனியம் தகவல் தொழில்நுட்பங்கள், கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் ஏதேனும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.