
சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.43 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.43,040-க்கு விற்பனைசெய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்தது, ரூ.5,380 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.75 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.75,000 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை குறித்து சென்னைதங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தக்குமார் வெளியிட்டார்:
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெரிய முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால், இதன் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்டில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது.
இன்றைய நாளில் பதிவான பவுன் தங்கத்தின் விலையே கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை ஒரு ஆண்டு பதிவான விலையில் அதிகபட்ச விலை. இவ்வாறு அவர் கூறினார்.