
பணவீக்கம் Vs தங்கம்
இதே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1932.50 என்ற லெவலை எட்டியுள்ளது. இது மேலும் வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ள பணவீக்க விகிதமானது படிப்படியாக மெதுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் வங்கி கூட்டம்
பிப்ரவரி 1 முடிவடையவுள்ள பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் மெதுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி ஒரு கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என சுட்டிக் காட்டியது. தொடர்ந்து அதிகரித்துள்ள பணவீக்கம் என்பது பொருளாதாரத்தினை மெதுவாக்கலாம். இது மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்த தரவுகளுக்குப் பிறகு, கடந்த அமர்வில் உச்சத்தினை எட்டியது. அமெரிக்கா நடப்பு ஆண்டில் ரெசசனை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 5வது நாளாக தொடர்ந்து உச்சத்தினை எட்டி வருகின்றது. இது தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஊக்குவிக்கலாம்.

தங்கத்தின் முக்கிய லெவல்
தங்கத்தின் சப்போர்ட் லெவலானது 1912 – 1898 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1940 – 1951 டாலராகவும் உள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 23.65 – 23.48 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 24.10 – 24.28 டாலராகவும் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவலாக 56,510 – 56,380 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 56,940 – 57,140 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 68,050 – 67,520 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 68,950 – 69,580 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் படிப்படியாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

போர்ட்போலியோ
முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவில் 5 – 15% தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க சரியான வாய்ப்பாக அமையலாம். இது பியூச்சர் சந்தையிலோ அல்லது தங்க பத்திரத்திலோ, அல்லது தங்க ஐடிஎஃப்பில் என பிரித்தும் முதலீடு செய்யலாம்.