
புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்
கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது 8 மாத உச்சத்தில் காணப்படுகின்றது. இது 1925 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. தொடர்ந்து பணவீக்கமானது குறையத் தொடங்கியுள்ள நிலையில் டாலரின் மதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது 101.5 என்ற நிலையில் இருந்து 102.3 என்ற அளவு அதிகரித்துள்ளது. இது தங்கத்தில் புராபிட் செய்ய முதலீட்டாளர்களை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

முக்கிய லெவல்
எப்படியிருப்பினும் ஓட்டுமொர்த்த போக்கு என்பது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது வார அடிப்படையில் 1880 டாலர்கள் என்ற லெவலில் முடிவடைந்தால், இந்திய சந்தையில் 56,000 ரூபாய் எந்த சப்போர்ட் லெவலையும், 56, 600 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியது என்ன?
கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையும் சரிவில் காணப்பட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் முக்கிய தரவுகள், கச்சா எண்ணெய் விலை, ரெசசன் அச்சம் என பலவும் தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்சூக்கு 4.15 டாலர்கள் அதிகரித்து, 1911.20 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் வகையில்வே காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகாலமாக அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், வெள்ளி விலை அவுன்சூக்கு காலையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது சற்று குறைந்து, 23.470 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினைப் பொறுத்தவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 16 ரூபாய் அதிகரித்து, 56,302 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் வகையில்வே காணப்படுகின்றது. குறைந்து பின்னர் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 375 ரூபாய் குறைந்து, 67,852 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் மீடியம் டெர்மில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமத்திற்கு 8 ரூபாய் குறைந்து, 5290 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 42,320 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது வரவிருக்கும் நாட்களில் மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கலாம்.

ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமத்திற்கு 8 ரூபாய் குறைந்து, 5290 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 42,320 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது வரவிருக்கும் நாட்களில் மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கலாம்.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமத்திற்கு 8 ரூபாய் குறைந்து, 5771 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே 10 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 57,710 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமத்திற்கு 1.30 ரூபாய் குறைந்து, 73.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து, 73,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.