
தங்கம் விலை ஏற்றம்
நடப்பு ஆண்டில் இதுவரை தங்கம் விலையானது 4% ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்பட்ட டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம் என பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டாலர் இன்டெக்ஸ் கிட்டதட்ட 15% சரிவினைக் கண்டுள்ளது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்
தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வரும் பொருளாதாரம், பணவீக்கம், வட்டி விகிதம், டாலர் மதிப்பு சரிவு, பட்ஜெட் 2023ல் தங்கம் வரி குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் சரிவது என்பது நீண்டகால நோக்கில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்சூக்கு, 8.55 டாலர்கள் குறைந்து, 1927.15 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்சூக்கு 1.03% குறைந்து, 23.527 டாலராகக் காணப்படுகிறது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்றும் மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 155 ரூபாய் குறைந்து, 56,814 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது பிப்ரவரி 3 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், ரோலோவர், புராபிட் புக்கிங் இருக்கலம். ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 428 ரூபாய் குறைந்து, 68,134 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று மூன்று நாட்களுக்குப் பிறகு கிராமத்திற்கு 10 ரூபாய் குறைந்து, 5345 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42,760 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமத்திற்கு 11 ரூபாய் குறைந்து, 5831 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 58,310 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்தாலும், ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமத்திற்கு 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.