
மோசமான நிதி நிலை அறிக்கை
எல்லா செலவினங்களும் அதிகரித்த நிலையில், நாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இதற்கிடையில் எங்களின் நிதி நிலை அறிக்கையானது மோசமாக வந்துள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய சூழ்நிலைக்கு நாங்கள் முழுமையாக பொறுப்பேற்கிறோம். மூலதனத்தினை திரட்டும் இந்த நிலையில், நாங்கள் நிறுவனத்தை மறுசீரமைக்கவும் முடிவு செய்துள்ளோம்.

வேதனையளிக்கலாம்
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது அனைவருக்கும் வேதனையளிக்கலாம். துரதிஷ்டவசமாக சுமார் 70% பணியாளர்களை நாங்கள் குறைக்க வேண்டியிருக்கும் என அமித் பாசின் தெரிவித்துள்ளார்.
கோ மெக்கானிக் நிறுவனம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2016ல் தொடங்கப்பட்டது. குஷால் கர்வா மற்றும் அமித் பாசின் உள்ளிட்ட 4 நண்பர்களால் 2016ல் நிறுவப்பட்டது.

அமித் பாசின்?
சிறந்த கார் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனமாகும். இது அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டர்கள் மற்றும் உள்ளூர் பட்டறைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை குறைக்க 2016ல் கோமெக்கானிக்கை நிறுவினோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தினை வழங்க முடிந்தது.

முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்
இது தான் தொழில்நுட்பத்தின் மூலம் கார் சேவையை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு, குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகிறது எனலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினையும் பெற்றுள்ளது. இது பலரின் இதயத்தையும் வெல்ல கைகொடுத்தது.

இது தான் இலக்கு
ஆக அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களைப் பெறுவதே சிறந்த ஒரு ஆப்சன். இதன் மூலம் எங்களது வணிகத்தினை அதிவேகமாக விரிவுபடுத்தவும், விரிவாக்கம் செய்யவும் முடியும். சில நூறு வாடிக்கையாளர்களுடன் தொடங்கி, 7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இன்று சேவை செய்து வருகிறது.

மறுசீரமைப்பு நடவடிக்கை அவசியம்
ஒரு தொழில் முனைவோராக எங்கள் தவறுகளை அடையாளம் கண்டு, அதை சரி செய்து வருகிறோம். ஆக தீர்வுகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போதைய நிலைக்கு முழுப்பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். ஆக நிறுவனத்தினை மீட்டெடுக்க மறுசீரமைப்பு என்பது கட்டாயம்.

நிதி மோசடிகள்
ஒரு புறம் போதிய நிதி திரட்ட முடியாது என்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், மறுபுறம் இந்த நிதி திரட்ட முடியாமைக்கு முக்கிய காரணம் நிதி சம்பந்தமான பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் நிறுவனம் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது. எது எப்படியோ 70% மேலானவர்களின் பணி கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.