
கூகுள்
கூகுள் கடந்த வாரம் வெளியிட்ட பணிநீக்க அறிவிப்பில் தனது மொத்த ஊழியர்களில் 6 சதவீத பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து சுமார் 12000 ஊழியர்களை நிறுவன பணியிலிருந்து வெளியேற்றியது. இந்த நிலையில் முன்னணி முதலீட்டாளர் சுந்தர் பிச்சைக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.

டெக் ஊழியர்கள்
கூகுள் நிறுவனம் பணிநீக்கம் குறித்து ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்தாலும் அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா போன்றவை பணிநீக்கம் அறிவிக்கும் கூகுள் அறிவிக்கப்படாத நிலையில் கூகுள் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டதாகவே பலரும் நினைத்தனர்.

சுந்தர் பிச்சை
இந்த நிலையில் சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க முடிவை எதிர்த்து டெக் ஊழியர்கள் கடுமையாக விமர்சனம் செய்யும் நிலையில் ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார், இந்த கடிதம் தற்போது வைரலாகியுள்ளது.

ஹெட்ஜ் பண்டு
ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை நிர்வாக 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மிகவும் சரியான நடவடிக்கை, ஆனால் ஆல்பபெட் இன்னும் கூடுதலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

கிறிஸ்டோபர் ஹோன்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து சுமார் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கின் படி ஆல்பபெட் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,86,779 ஆக இருந்தது, இது தற்போது 1.5 லட்சம் ஆகும், அதாவது 2021 ஆம் ஆண்டு வர ஹெட்ஜ் பண்டு பில்லியனரான கிறிஸ்டோபர் ஹோன் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மீடியன் சம்பளம்
இதேபோல் 2021ல் கூகுள் ஊழியர்களின் மீடியன் சம்பளம் 30000 டாலர் இது சராசரி சம்பளத்தை காட்டிலும் அதிகம் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2022 ல் தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.

சுந்தர் பிச்சை ஈமெயில்
சுந்தர் பிச்சை பணிநீக்கம் குறித்து தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தற்போது பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

25 வருட வரலாறு
மோசமான பொருளாதார மாற்றத்தில் கூகுளின் 25 வருட வரலாற்றில் மாட்டிக்கொண்டு உள்ளது. கடந்த 2 வருடம் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்காமல் கூடுதல் ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்தால், தற்போது பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.