
பொருளாதார மந்தம்
உலகளவில் நிலவி வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரு நிறுவனங்கள் பலவும், செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணி நீக்கத்தினை கையில் எடுத்துள்ளன. பல நிறுவனங்களும் பணி நீக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளன.

சுந்தர் பிச்சை மெயில்
அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் பணி நீக்க அறிவிப்பு வந்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில், சுமார் 12,000 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைபெறும் நேரம்
திறமையான ஊழியர்களிடம் விடைபெறும் நேரம் இது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என மெயில் கேட்டிருந்தார். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முழுப் பொறுப்பும் நானே. கடினமாக உழைத்த ஊழியர்களை அனுப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. இது ஊழியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றும் சுந்தர் பிச்சை மெயிலில் கூறியுள்ளார்.

முதலீடுகள் அதிகரிக்கலாம்
கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் வளர்ச்சியினை கண்டோம். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படியில்லை. சர்வதேச அளவில் நிலைமை பதற்றமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. எனினும் தொடர்ந்து AI பிரிவில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சங்கத்தின் வாதம்
இதற்கிடையில் தான் இந்த பணி நீக்கம் குறித்து 12,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த நிலையில், 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நிறுவனத்தின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். கூகுள் நல்ல லாபத்தில் உள்ள ஒரு நிறுவனம். இது பணி நீக்கம் செய்வது தேவையற்ற செயல். நிறுவனம் எளிதாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என தொழிலாளர் சங்கம் வாதிட்டுள்ளது.

கூடுதல் ஆதரவு வேண்டும்
மேலும் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் வெளிப்படையாக இல்லை. கூகுள் இது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இது அவசியமானதா? என்பது குறித்தும் கருத்து இல்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்று தொழில்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.