
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மைக்ரோசாப்ட் , சோமோட்டோ, போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆட்குறைப்பு பணியை தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனமும் 12,000 பணியாட்களை நீக்க போவதாக அறிவித்தது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “தோராயமாக 12,000 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு நாங்கள் ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற உள்ளூர் நாடுகளில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.
அப்படி விடுவிக்கப்படும் ஊழியர்களுக்கு எந்த எச்சரிக்கையும், தகவல் பரிமாற்றமும் கொடுக்காமல் அவர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளது. கூகுளில்ஜினியரிங் மேலாளராகப் பணியாற்றிய ஜஸ்டின் மூர், தனது சமூக வலைதளத்தில் பணிநீக்கம் குறித்து தனக்கு எந்த முன் எச்சரிக்கையும் வரவில்லை என்று பகிர்ந்துள்ளார். பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூர், நள்ளிரவில் தனது கணக்கு திடீரென செயலிழந்ததாகப் பகிர்ந்துள்ளார்.
“16.5 ஆண்டுகளுக்கு மேலாக கூகுளில் பணியாற்றிய பிறகு, இன்று அதிகாலை 3 மணிக்கு 12,000 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக, தானியங்கி கணக்கு செயலிழப்பு மூலம் நான் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. என்னிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை. நீங்கள் விடுவிக்கப்பட்ட ஒரு செய்தி கூட எனக்கு வரவில்லை.
கூகுளின் மற்றொரு பணியாளர் பொறியாளர் ரிச்சர்ட் ஹே, அவர் 15.5 ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், மூரைப் போலவே அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தனது இடுகையில் கருத்துத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: