
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரெய்டன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், நவி மும்பை பகுதியில் உள்ள மகாராஷ்டிரா இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் தொழிற்பேட்டையில் சுமார் 3.81 லட்சம் சதுர அடி பரப்பளவிலான டேட்டாடர் சென்ட் இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

அமந்தின் இன்ஃபோ பார்க்ஸ்
சுமார் 28 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை அமந்தின் இன்ஃபோ பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து மாதம் 8.83 கோடி ரூபாய் வாடகையில் இந்த இடத்தைப் பிடித்துள்ளது.

ரைடன் இன்ஃபோடெக் இந்தியா
ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான சிஆர்ஐ மெட்ரிக்ஸ் ஆய்வு இந்த ஒப்பந்தத்தில் ரைடன் இன்ஃபோடெக் இந்தியா, இந்த இடத்திற்கு உரிமம் பெற்ற அமந்தின் இன்ஃபோ பார்க்ஸ் மற்றும் எம்ஐடிசி அமைப்புக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாதம் 8.83 கோடி ரூபாய் வாடகை
அமந்தின் இன்ஃபோ பார்க்ஸுக்கு நிலத்தைக் குத்தகைக்கு விட்ட அமைப்பு தான் MIDC – மகாராஷ்டிரா இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன். இந்த ஒப்பந்தத்தில் முதல் வருடம் மட்டும் மாதம் 8.83 கோடி ரூபாய் வாடகை, இதைத் தொடர்ந்து இது ஆண்டுக்கு 1.75 சதவீதம் வாடகை உயர்வு இருக்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணி நிறுவனம்
Amanhin Info Parks என்பது Everyondr-க்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். Amanhin Info Parks டேட்டா சென்டர் வர்த்தகத்தில் இறங்குவதற்காக இத்துறை நிறுவனமான Yondr குழு மற்றும் Everstone குழுமத்தின் கூட்டணி நிறுவனமாகும்.

8 மாடி கட்டிடம்
நவி பகுதியில் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ள 3.81 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் புதிய டேட்டா சென்டர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முடிவு செய்யப்பட்ட திட்டத்தின் படி இந்த டேட்டா சென்டர் பேஸ்மென்ட் மற்றும் ரூப் உடன் கூடிய 8 மாடி கட்டிடமாக அமைய உள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனமான டிசி டெவலப்மென்ட் நொய்டா லிமிடெட், நொய்டாவில் சுமார் 4.64 லட்சம் சதுர அடி இடத்தை ஆரம்ப மாத வாடகையுடன் 10 ஆண்டுகளுக்கு குகுள் நிறுவனமான ரெய்டன் இன்ஃபோடெக் இந்தியா நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியது.

நொய்டா
அதானி எண்டர்பிரைசஸ் நொய்டா இடத்திற்காக சுமார் 10.90 கோடி ரூபாய் மதிப்பிலான மாத வாடகை பெறப்படுகிறது. மும்பை இடத்தைக் காட்டிலும் அதிகப் பரப்பளவு மற்றும் அதிக மாத வாடகை. நொய்டா, செக்டார் 62ல் அமைந்துள்ள அதானி டேட்டா சென்டரில் கூகுள் இடத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.