
1/18/2023 11:50:24 AM
துபாயில் டிபி எனப்படும் துபாய் புள்ளைங்கோ அமைப்பு சார்பில் பிரம்மாண்டமான பொங்கல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். காலையில் பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்கள் ஷாநவாஸ் மற்றும் ஹயாஸ் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அன்று மாலை தனியார் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு நட்சத்திரங்களாக விஜய் டிவி புகழ் நிஷா, குரேசி, புகழ் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் தலைமை விருந்தினர்களாக ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், தொழிலதிபர் ஷாநவாஸ், 106.5 fm கனகராஜ், அரவிந்தன், ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர் கீழக்கரை ஜமாலுதீன், இன்சூரன்ஸ் யாசர் அரஃபாத், அல் நபூதா இன்சூரன்ஸ் ஜலாலுதீன், அப்துல்லா , பிரபாகரன், சங்கர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.