
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மீன ராசியில் இருந்து குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்
ஜோதிடம்
ஓய்-ஜெயலட்சுமி சி
சென்னை: குரு பகவான் 12ஆம் ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு குபேர யோகத்தை தரப்போகிறது. குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் குருவின் பார்வையால் பல நன்மைகள் கிடைக்கும்.

மனிதர்களுக்கு கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மை செய்யும் என்று சொல்வார்கள். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த இடத்தில் குரு அமர்கிறார் எந்தெந்த இடங்களில் பார்வையிடப்போகிறார் அதன் மூலம் என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம் – ஜென்ம குரு

மேஷ ராசிக்காரர்களே.. ‘ஜென்ம குரு வனத்தினிலே’ என்று சொல்வார்கள்.. சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். ஒவ்வொரு செயலிலும் முன்யோசனை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம், குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவியில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும்.
ரிஷபம் – விரைய குரு
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரயச் செலவு ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியால் தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு சொத்து சேர்க்கை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நலமடையும், நோய்கள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும்.
மிதுனம் – லாப குரு
மிதுன ராசிக்காரர்களே..குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் தேதி வீட்டிற்கு வரப்போகிறார். தொழில் ரீதியான லாபம் பெருகும். வேலை தொழிலில் இருந்து நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமணம் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை பாக்கியம் கைகூடி வரும், புதிய வேலை கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம் – தொழில் குரு
கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். பத்தில் குரு பதவியை பறித்து விடுவாரோ என்ற பயம் வேண்டாம். செய்யும் தொழில் அல்லது வேலையில் மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் சிக்கலாகிவிடும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும்.
சிம்மம் – பாக்ய குரு

சிம்ம ராசிக்காரர்களே.. குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபாடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணம் கைகூடி வரப்போகிறது. நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வரும். பெண்களுக்கு தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. குரு பலனால் கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும்.
கன்னி – அஷ்டம குரு
கன்னி ராசிக்காரர்களே.. உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு குரு பகவான் வரப்போகிறார். அஷ்டம குரு கஷ்டங்களை நீக்கப்போகிறார். தொழில் வேலை விஷயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். வேலைக்காக செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரயங்கள் ஏற்படும்.
துலாம் – களத்திர குரு
துலாம் ராசிக்காரர்களே குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது.
விருச்சிகம் – ருண ரோக சத்ரு குரு
விருச்சிக ராசிக்காரர்களே..குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். இது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான சிக்கல்கள் நீங்கும். 12ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் சிலருக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
தனுசு – பூர்வ புண்ணிய குரு
தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் குரு பயணம் செய்யப்போவதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். ஏழரை சனி காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. சில பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
மகரம் – சுக ஸ்தான குரு
குரு பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் அமர்வதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம், எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தின் மீது விழுகிறது. நோய்களும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதிகாரப்பதவி தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
மிதக்கும் கப்பல் போல மின்னொளியில் ஜொலிக்கும் பழனி..குடமுழுக்கு யாகசாலையில் தமிழ் புறக்கணிப்பா?
கும்பம் – தைரிய குரு
உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணித்த குருபகவான் மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் மறையப்போகிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறிய ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு முதல் உங்கள் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை தொழிலில் லாபம் கிடைக்கும். ஜென்ம சனி காலம் என்பதால் அகலக்கால் வைக்க வேண்டாம்.பெரிய அளவில் முதலீடு செய்வதை விட சிறிய அளவில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
மீனம் – குடும்ப குரு

உங்கள் ஜென்ம ராசியில் பயணித்த குருபகவான் குடும்ப ஸ்தானத்திற்கு செல்வதால் சிக்கல்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். நல்ல தன வரவு வரும். சேமிப்பும் உயரும். கடன் பிரச்சினைகள் நீங்கும் காலம் வந்து விட்டது. திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் நீங்கும் பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள்.
ஆங்கில சுருக்கம்
Guru Peyarchi palan 2022: (குரு பெயர்ச்சி பலன் 2022) Guru transit is scheduled to take place on Panguni 30th and 13th April 2022. Let’s see which zodiac signs benefits and who should make parikaram for Jupiter transit prediction for Thulam,Viruchigam, Dhanus கும்பம் மற்றும் மீனம்.
முதலில் வெளியான கதை: புதன், ஜனவரி 25, 2023, 10:48 [IST]