
சபரிமலை உண்டியல் எண்ணும் பணி நீட்டிப்பு – உண்மை காரணம் இது தான்
இந்தியாவில் உள்ள கோவில்களில் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோவிலாக பத்மநாபபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. ஆனால் இக்கோவிலில் உள்ள ஆறாவது ரகசிய அறை இதுவரை திறக்கப்படாததால் கோவில் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு சரியாக தெரியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவில் சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பலரும் கேட்டு வந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சொத்து விபரங்களை தர கோவில் நிர்வாகம் மறுத்து விட்டது. குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் 11 கோவில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குருவாயூர் கோவில் சொத்து மதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. இதற்கு தற்போது குருவாயூரப்பன் கோவில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
Elarai Sani Pariharam: ஆஞ்சநேயரை ஏழரை சனி பிடித்த கதை தெரியுமா?
கோவில் நிர்வாகத்தினர் தகவலின் அடிப்படையில், குருவாயூரப்பன் கோவிலுக்கு சொந்தமாக விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட 263.637 கிலோ தங்கம் உள்ளது. இவற்றில் 20,000 க்கும் அதிகமான தங்க லாக்கெட்களும் அடங்கும். இதே போல் குருவாயூரப்பன் கோவில் வங்கி கணக்கில் ரூ.1700 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் வைப்பு கணக்கில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் திருப்பதி போக போறீங்களா? இந்த தேதிகளை குறிவைத்து கொள்ளுங்கள்
இதோடு 6605 கிலோ வெள்ளி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளதாகவும், கோவிலுக்கு சொந்தமாக 271.05 ஏக்கரில் நிலம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மொத்தம் எவ்வளவு தங்கம், வெள்ளி கோவிலுக்கு சொந்தமாக உள்ளது என்பது பற்றிய சரியான அளவை கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை.
குருவாயூரப்பன் கோவில் நிர்வாகத்திடம் கோவில் சொத்து மதிப்பு தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க கோவில் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.