
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்& SMI
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் (SMI) நிறுவனத்தின் 100% பங்கினையும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட இந்த லாபகரமான நிறுவனத்தினை 11 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிபுணத்துவம் கொண்ட நிறுவனம்
ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் (SMI) நிறுவனம் அதன் விரைவான செயல்பாடுகள், தரமான சாப்ட்வேர் சேவை என மேம்படுத்தப்பட்ட சேவைகளை செய்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் பல ஆண்டுகளாகவே ஹெல்த்கர் துறையில் ஆழமான நிபுணத்துவம் கொண்ட ஒரு நிறுவனம் என ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

திறமையான குழு
இது குறித்து ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் நிர்வாக தலைவர் & CFO வெங்கட்ராமன் நாராயணன், ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் ஹெல்த்கர் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு திறமையான குழுவைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிறுவனத்தினை எங்கள் நிறுவனத்துடன் இணைப்பதில் நாங்கல் பெருமை அடைகிறோம்.

எத்தனை ஊழியர்கள்?
இந்த நிறுவனத்தில் 400 ஊழியர்கள் உள்ளதாகவும், இதன் ஆண்டு வருவாய் விகிதம் 9 மில்லியன் டாலர் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது வலுவான லாபகரமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை எங்கள் குழுமத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த ஸ்வையை அளிப்போம். இது மதுரை மற்றும் கோயம்புத்தூர் என டயர்2 நகரங்களில் வளர்ச்சி கண்டு வரும் இந்த நிறுவனம் தொலைநோக்கு பார்வையுடன் உள்ளதாகவும் வெங்கராமன் தெரிவித்துள்ளார்.

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த புதன் கிழமையன்று 1.33% சரிவைக் கண்டு, 865 ரூபாய் என்ற விலையில் முடிவடைந்துள்ளது.