
கடன் அதிகரிப்பு
எனினும் இந்த காலகட்டத்திலும் அதானி குழும நிறுவனங்களின் கடன் விகிதமும் அதிகரித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் புதியதாக காலடி எடுத்து வரும் நிலையில், பற்பல நிறுவனங்களையும் வாங்கி வருகிறது. பற்பல நிறுவனங்களின் பங்கினையும் வாங்கி வருகின்றது. மொத்தத்தில் தொடர்ச்சியால பல ஆயிரம் கோடிகளை முதலீடாக அறிவித்து வருகின்றது.

பங்கு சந்தை மூலம் நிதி திரட்டல்
இது ஒரு புறம் பெரும் ஆச்சரியத்தை அளித்தாலும், மறுபுறம் அதானி குழுமம் அதிகளவிலான கடனை வாங்குகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அதானியோ கடன் வாங்கினாலும், நிதி திரட்டினாலும் அதனை சரியான வழியில் குறைந்த வட்டியிலும், அல்லது பங்கு சந்தை மூலமாகவோ திரட்டி வருகின்றார் எனலாம்.

உரிமை பங்கு வெளியீடு திட்டம்
அதானி குழும நிறுவனம் தனது உரிமை பங்கு வெளியீட்டை செய்யவுள்ளது. பாலோ ஆன் பப்ளிக் ஆபரிங் என்று கூறப்படும் உரிமை பங்கு வெளியீட்டை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த உரிமைப் பங்கு வெளியிடப்பட்டது ஜனவரி 27 அன்று தொடங்கி, ஜனவரி 31 அன்று முடிவடைகிறது.

FPO என்றால் என்ன?
உரிமை பங்கு வெளியீடு என்பது ஏற்கனவே தங்களது பங்கினை பங்கு சந்தையில் பட்டியலிட்டுள்ள ஒரு நிறுவனம், மீண்டும் தங்களது நிதி தேவைக்காக தங்கள் பங்கினை விற்பனை செய்யலாம். இதன் மூலம் தேவையான நிதியினை திரட்டும் எனலாம். திரட்டப்படும் நிதியினை வைத்து கடன்களை அடைக்க பணம் தேவைப்படலாம் என்று பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாக ஒரு நிறுவனம் Follow on Public offer என்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணைபுரியும் எனலாம்.

எதற்காக இந்த நிதி?
கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசஸ், 10,900 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை பசுமை ஹைட்ரஜன் திட்டம், விமான நிலையம், விரைவுச் சாலைகள் என பல வணிகங்களுக்கு நிதியளிக்க திட்டமிட்டுள்ளது.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் மற்றும் முந்த்ரா சோலார் உள்ளிட்ட நிறுவனங்களின் கடனை செலுத்தவும் நிதியினை பயன்படுத்துகிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
இதற்கிடையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 1.5% சரிவினைக் கண்டு, 3584.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த உரிமைப் பங்கு வெளியீடு என்பது முதலீட்டாளர்களுக்கு சிறந்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கை குறைந்த விலையில் வாங்க இது ஒரு வாய்ப்பாக அமையலாம். இது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் எனலாம்.

அதானி குழும கையகப்படுத்தல்கள்
அதானி குழுமம் கடந்த ஆண்டில் 13.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கையகப்படுத்தல்களை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இருமடங்கி அதிகம் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 130% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.