
ஹெச்சிஎல் நிறுவனம்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி புதிய டெக் ஊழியர்கள் நியமனத்தின் அளவு 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

3000 ஊழியர்கள்
மேலும் கடந்த 12 மாதத்தில் பிரஷ்ஷர் மற்றும் அனுபவம் பெற்ற அதிகாரிகள் என நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும், பிரிவிலும் சுமார் 30000 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளோம். இதேபோல் அடுத்ததாக 12 மாதத்தில் 30000 ஊழியர்களைச் சேர்க்க உள்ளோம் எனச் சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சேவை
இந்தியாவில் அனைத்து முன்னணி டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களும் டிஜிட்டல் சேவை மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில் ஹெச்சிஎல் சிஐஓ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

செயற்கை நுண்ணறிவு
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் டிஜிட்டல் சேவை பிரிவின் வளர்ச்சியின் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில், செயற்கை நுண்ணறிவு பிரிவு வளர்ச்சிக்கான கவனம் உயரும்.

கூடுதல் கவனம்
மேலும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ல் டிஜிட்டல் சேவை பிரிவு தனியாக இல்லாமல் ஒருங்கிணைந்து இருக்கும் காரணத்தால் கூடுதல் கவனத்தைப் பெறும் ஹெச்சிஎல் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறி
இன்றைய வர்த்தக உலகில் ஆன்லைன் ஷாப்பிங் முதல் பயணம் வரை அனைத்து டிஜிட்டல் சேலை தளத்திலும் செயற்கை நுண்ணறி செயல்பாடுகளால் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கத் தான் போகிறது.

AI துறை
இந்த நிலையில் ஹெச்சிஎல் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.ஐ விஜயகுமார் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் கலந்துகொண்ட போது ஒரு பேட்டியில் AI துறை பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் பேசியுள்ளார்.

10 டிரில்லியன் டாலர் சந்தை
இன்றைய டிஜிட்டல் வர்த்தக உலகில் AI வாய்ப்புகள் நிறைந்துள்ளது கண்முன்னே தெரிகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு பிரிவில் மட்டும் நிலையான தீர்வுகள் மற்றும் சேவைகளுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் எனக் கணித்துள்ளார் சி விஜயகுமார். இதனால் மிகப்பெரிய வர்த்தகப் பிரிவாக மாறும் இந்த வாய்ப்புகளை ஹெச்சிஎல் கைவிடாது.