
WPI முக்கிய பணவீக்கம்
தொடர்ந்து மூலதன செலவினங்கள் மற்றும் அதிக அடிப்படை விலைகள் மிதமாகிய நிலையில், டிசம்பர் மாத மொத்த விலை முக்கிய பணவீக்கம் 3.2% ஆக இருந்தது. அதே நேரத்தில் 3.9%ல் இருந்து, 2.8% ஆக குறையும் என மதிப்பிட்டனர். இது இறுதியில் எதிர்பார்த்ததை போலவே சந்தைக்கு சாதகமாக ஓரளவு இலக்கினை எட்டியுள்ளது எனலாம்.

அழுத்தம் குறைவு
எஸ்&பி உற்பத்தி பிஎம்ஐ ஆய்வில் உற்பத்தி துறையில் அழுத்தம் குறைந்த நிலையில், நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் தான் 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கமானது குறைந்துள்ளது.

நவம்பர் மாத நிலவரம்
கடந்த நவம்பர் மாதத்திலேயே ஆச்சரியமளிக்கும் விதமாக முதல் முறையாக 19 மாதங்களுக்கு பிறகு ஒற்றை இலக்கத்திற்கு சரிவினைக் கண்டது. தொடர்ந்து பல்வேறு மூலதன பொருட்கள் விலையானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், காய்கறிகளின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. இதே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. எரிபொருள் அல்லாத பலவற்றின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே உணவு பணவீக்கமும் சரிவினை கண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இலக்கு
இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கணத்திற்கு கீழாக சரிவினைக் கண்டு வருவது மிகவும் சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாமா என்ற அச்சமும் இருந்து வருகின்றது.