
ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்தப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நடைபெற இருக்கிறது என்று ஜோதிட வல்லுநர்கள். அதேபோல வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலுமே, சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு 48 நாட்களுக்கு முன்பே அதற்குரிய பலன்களும், தாக்கங்களும் தெரிய ஆரம்பித்துவிடும் என்ற ஐதீகம் இருக்கின்றது. அதேபோல 48 நாட்களுக்கு முன்பே அந்தந்த ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும் அவரவர்க்கு உரிய தெய்வங்களை வழிபடுவது என்ற வழக்கமும் தொடங்கியிருக்கின்றது.
இன்று, ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:04 நிமிடங்களுக்கு சனி பகவான் தனது ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். மகரம் என்பது நில ராசி; கும்பம் என்பது காற்று ராசி. எனவே இரண்டு ராசிகளிலுமே சனியின் தன்மை வெவ்வேறாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரித்த சனி கும்ப ராசியில் செவ்வாய், குரு மற்றும் தனது சொந்த நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கிறார்.
12 ராசிகளுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை ஓரிரு வரிகளில் பார்க்கலாம்.
மேஷ ராசி – லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வேலை மாற்றங்கள் ஏற்படும், மிகவும் சாதகமான, அதிர்ஷ்டமான பெயர்ச்சி. வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு
ரிஷப ராசி – கர்ம ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகும் சனியால், தொழில், வேலை மேன்மை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. சுப விரயம் ஏற்படும். வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வாழபாட்டு வரவும்
மிதுன ராசி – அஷ்டம சனியின் பிடியில் இருந்து வெளியில வர மிதுன ராசி நேயர்களுக்கு நினைத்தது எல்லாமே நடக்கும் பெயர்ச்சி தான். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த வருடத்தில், பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ராமேஸ்வரத்தில் செய்யலாம். வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு செய்யலாம்
கடக ராசி – அஷ்டம சனி ஆரம்பிக்கும் காலம் என்பதால் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக எதையும் தொடங்க வேண்டாம். பொறுமை காப்பது அவசியம் வழிபாடு: சிவபெருமான், ஆஞ்சநேயர், தம்பதியாக இருக்க கூடிய தெய்வங்களின் வழிபாடு அவசியம்
சிம்ம ராசி – குடும்பத்தில், கணவன் மனைவி ஒற்றுமையில் பிரச்சனை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழிபாடு: தெய்வத் திருமணம் செய்வது தடைகளை தகர்க்கும்
கன்னி ராசி – ஆறாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆவது நல்ல பெயர்ச்சியாக இருந்தாலும், கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மறைமுக எதிரிகள் உருவாகலாம்.. வழிபாடு: பெருமாள் வழிபாடும் குல தெய்வ வழிபாடும் மேன்மையைத் தரும்
துலாம் ராசி – துலாம் ராசிக்கு யோக கிரகமான சனி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுவது சாதகமான காலத்தைக் குறிக்கிறது. அன்னதானம், வஸ்திர தானம் செய்வது வழிபாடு: ஐயப்ப வழிபாடு, சித்தர் வழிபாடு
விருச்சிக ராசி – உங்கள் ராசிக்கு நாலாவது வீட்டில் பெயர்ச்சி ஆகும் சனி பகவானால், உறவுகள் சார்ந்த சிறிய தொந்தரவுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து போக வேண்டும். வழிபாடு: சனிக்கிழமைகளில் நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மைகளைத் தரும்
தனுசு ராசி – தனுசு ராசியினருக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும் காலம், ஏனென்றால் ஏழரை சனியின் பிடியில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள். மிகவும் திருப்திகரமான காலமாகவும், தடைகள் விலகும் பெயர்ச்சியாகவும் அமையும்.. வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு
மகர ராசி – ஜென்ம சனி விலகி, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கும்பத்தில் பாத சனியாக பெயர்ச்சி ஆவது நெருக்கடியை குறைக்கும்.. வழிபாடு: திருப்பதி ஒரு முறை சென்று வரலாம்.
கும்ப ராசி – ஏழரை சனியின் இரண்டாம் காலமான ஜென்ம சனியின் பெயர்ச்சியில் சோம்பலை மட்டும் கைவிட்டால் போதும். கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இருக்கும்.. வழிபாடு: ஆஞ்சநேயர் வழிபாடு
மீன ராசி – மீன ராசியினருக்கு ஏழரைச் சனியின் தொடக்க காலம். பணம் சார்ந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.. வழிபாடு: சிவன் ஆலயங்களில் தயிர் சாதம் அன்னதானம் செய்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: