
குன்றின் மேல் குமரன் என்ற சொற்றொடருக்கு ஏற்றபடி சிறிய குன்றின் மேல் பாவூர்சத்திரத்தில் அமைந்திருக்கிறது வெண்ணிமலை முருகன் கோவில். தரை மட்டத்திலிருந்து சிறிது உயரமாக இருப்பதால் இந்த கோவில் நகரில் இரைச்சலில் இருந்து விடுபட்டு சத்தமின்றி அமைதியாக காட்சி அளிக்கிறது. இந்த கோவில் நுழைவு வாயிலில் ஒரு புறம் ராஜகணபதியும், மகாலட்சுமியும் அமைந்திருந்தனர். மேலும் கால பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்களும் அமைந்துள்ளன.
அமைதியான சூழலில் மலைகளில் இருந்து குடைந்து அமைக்கப்பட்ட வெண்ணிமலைமுருகன் மற்றும் பின்னால் அமைந்திருக்கும் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இங்கு கூடுவர். வெண்ணிமலை முருகன் கோவிலில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். விசேஷ நேரங்களில் கோவில் முழு நேரமும் திறக்கப்பட்டிருக்கும்.
மேலும் இந்த கோவிலின் அருகில் ஆதிபராசக்தி கோவில் ஒன்று உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பாறைகளில் புதர்கள் மூடி கிடந்ததாகவும், அதில் திருடர்கள் ஒளிந்து கொள்ளும் இடமாகவும் இந்த வென்னிமலை இருந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இங்கு நரிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் இந்த ஊர் மக்கள் தேவை. மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான கற்களை இந்த மலையிலிருந்து எடுத்து கட்டியதாகவும் சிலபேர் கூறுகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
இதன் பிறகு சுமார் 45 ஆண்டுகள் முன்பு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நிதி திரட்டி இங்கு கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக கல்வெட்டுகளில் ஊர் மக்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. வெண்ணிமலை முருகன் கோவிலில் கார்த்திகை மாதம் மற்றும் பௌர்ணமி பூஜைகள் வெகு விமர்சையாக இருக்கும். பாவூர்சத்திரம் வெண்ணிமலை முருகன் கோவில் என்றாலே மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவலம் வந்து முருகனை பூஜை செய்து வழிபடுவது வழக்கம். பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் பல ஊர்களில் இருந்து வெண்ணிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவின் போது வேலு குத்தி, பால்குடம், பறவைக்காவடி போன்றவற்றை செய்து தங்களது வேண்டுதல்களை வெண்ணிமலை முருகனிடம் வைப்பார். மாசி மாசம் நடைபெறும் 12 நாள் திருவிழாவில் தவறாமல் இந்த வருடம் நீங்களும் கலந்து கொண்டு வெண்ணி மலை முருகனின் அருளைப் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: