
ஆட்டோமொபைல்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இரு சக்கர வாகனங்களுக்கும் சரி, நான்கு சக்கர வாகனங்கள், சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறி வருகின்றன.

EV போட்டி
இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்த மஹிந்திரா & மஹிந்திரா மிகவும் தாமதமாக EV போட்டியில் இறங்கியுள்ளது. ஆனால் மஹிந்திரா ஓரே நேரத்தில் ஒட்டுமொத்த வாகனங்களின் தரம், டிசைன்-ஐ ஓரே நேரத்தில் மாறியுள்ளது.

10,000 கோடி ரூபாய்
மஹிந்திரா நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்துள்ள Born Electric Vehicles (BEVs)-க்கான உற்பத்தி வசதி, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்காக அடுத்த 7-8 ஆண்டுகளில் தோராயமாக 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்கிறது.

தனிப் பிரிவு
இந்த 10000 கோடி ரூபாய் முதலீடுகளை மஹிந்திரா நிறுவனம் நேரடியாகச் செய்யாமல் தனது கிளை நிறுவனத்தின் மூலம் செய்ய உள்ளது. இதன் மூலம் மஹிந்திரா குழுமத்தின் எலக்ட்ரிக் வாகனம் ஆரம்பம் முதல் தனிப் பிரிவாகச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது மஹிந்திரா குழுமம்.

INGLO EV பிளாட்ஃபார்மை
மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் அதிநவீன INGLO EV பிளாட்ஃபார்மை நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கிறது. மஹிந்திரா & மஹிந்திரா கார்களுக்கு எப்போதும் இந்தியாவில் இடம்பிடிக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது இந்த நிலையில் மஹிந்திரா-வின் ஐகானிக் பிராண்டான XUV கீழ் e-SUV கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பு அடையாளங்கள்
இப்புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் செப்பு நிறத்தில் ட்வின் பீக் லோகோ மற்றும் ‘BE’ எனப்படும் அனைத்து புதிய மின்சாரம் கார்களுக்கான பிராண்ட் பெயரைக் கொண்டிருக்கும்.

புனே
புனேவில் எங்களின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கும், அதில் முதலீடு செய்வதற்கும் மகாராஷ்டிரா அரசின் இந்த ஒப்புதலால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஆட்டோ மற்றும் பண்ணை துறைகளின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் பேசினார்.

70 ஆண்டுகல்
மேலும் அவர் 70 ஆண்டுகளுக்கு மேலாக மஹிந்திரா மகாராஷ்டிராவில் முதலீடு செய்து வருவதால் எங்கள் சொந்த மாநிலமாக விளங்குகிறது. மகாராஷ்டிரா அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி எனப் பேசினார்.

ராஜேஷ் ஜெஜூரிகர்
மகாராஷ்டிரா மாநில அரசு மஹிந்திராவின் முதலீட்டுடன் ‘எளிதில்-வணிகம்’ மற்றும் முற்போக்கான கொள்கைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறது. மகாராஷ்டிராவை இந்தியாவின் EV மையமாக மாற்றுவதற்கு மஹிந்திராவின் முதலீடு ஊக்கியாகச் செயல்படும், மேலும் இந்திய மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை இதன் மூலம் ஈர்க்கும் என ராஜேஷ் ஜெஜூரிகர் பேசினார்.