
புவனேஷ்வர்: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய ஹாக்கி அணி, வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் முதல் சுற்றுப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார்.
புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு ஹாக்கி விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.