
2023 ஆம் ஆண்டு
2023 ஆம் ஆண்டில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது விலைவாசி உயர்வு தான், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளால் ஏற்படும் பாதிப்புகளால் இந்தியாவில் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு
இந்த நிலையில் விலைவாசி உயர்வு இந்திய ரீயல் எஸ்டேட் துறைகளையும் கடுமையாக பாதிக்கிறது. இந்த நிலையில் 58 சதவீத ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இன்புட் செலவுகள் அதிகரிப்பதால் இந்த ஆண்டு வீட்டு விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டின் விலை
அதே நேரத்தில் 32 சதவீத பில்டர்கள் வீட்டின் விலை நிலையானதாக இருக்கும் என்றும், 25 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் கணித்துள்ளனர். இன்புட் செலவுகள் என்பது கட்டுமான பொருட்கள் விலை, கட்டுமான ஊழியர்களின் செலவுகள் என அனைத்தும் இதன் மூலம் பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆய்வு
ரியல் எஸ்டேட் தலைமை அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் கன்சல்டென்ட் நிறுனமான Colliers India மற்றும் சொத்து ஆராய்ச்சி நிறுவனமான Liases Foras ஆகியவை இணைந்து செய்த ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சென்டிமென்ட் சர்வேயின் படி இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

வீடுகளுக்கான டிமாண்ட்
இதேபோல் 43 சதவீத டெவலப்பர்கள் 2023 ஆம் ஆண்டில் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் 2022 ஆம் ஆண்டு ஆண்டை போலவே நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், 31 சதவீசம் பேர் வீடுகளுக்கான டிமாண்ட் கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகரிக்கும் என கணித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஆய்வு
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சென்டிமென்ட் சர்வேயில் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 341 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பங்கு பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தாலும், வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

டாப்-7 நகரங்கள்
202 ஆம் ஆண்டு நாட்டின் டாப்-7 நகரங்களில் வீட்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டியது 2014 ஆம் ஆண்டின் பதிவு செய்யப்பட்ட முந்தைய அதிகபட்ச அளவை தாண்டியுள்ளதாக அனாரோக் தெரிவித்தார்.

364,900 வீடுகள் விற்பனை
2022 ஆம் ஆண்டு இந்தியாவின் டாப்-7 நகரங்களில் சுமார் 364,900 வீடுகள் விற்பனையாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் டாப் 7 நகரங்களில் 236,500 வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சுமார் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.