
புது டெல்லி: இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் ஆக்டிவா எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. மூன்று வேரியண்ட்டுகளில் இந்த ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமாகும். இந்தியாவில் ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடம் அமைந்துள்ளது. இங்கிருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை நிறுவனம் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு பணியையும் கவனித்து வருகிறது.
பெருவாரியான மக்களை கவர்ந்த ஆக்டிவா ஸ்கூட்டர் இதன் தயாரிப்புதான். அந்த வகையில் தற்போது எச்-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆக்டிவாவை ஹோண்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என மூன்று வேரியண்ட்டுகளில் இது கிடைக்கிறது. முறையே ரூ.74,536, ரூ.77,036 மற்றும் ரூ.80,537 எக்ஸ்-ஷோரூம் விலையை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. காப்புரிமை பெற்று 5 புதிய தொழில்நுட்ப பயன்பாடு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்-கீ இடம்பெற்றுள்ளது. அதைக் கொண்டு காரை போலவே சாவியை ரிமோட்டில் இயக்கி ஸ்கூட்டரை லாக் மற்றும் அன்-லாக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் இருந்து 2 மீட்டர் தொலைவுக்குள் இருந்தபடி என்ஜினை ஆன் மற்றும் ஆப் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
110சிசி PGM-FI என்ஜின், புதிய டிசைனில் அலாய் வீல், டிசி எல்இடி ஹெட்லெம்ப், முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்சன், பின்பக்கத்தில் அடாஜெஸ்டபிள் சஸ்பென்சன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய Activa மூலம் ஸ்மார்ட் வாழ்க்கையை அனுபவிக்க தயாராகுங்கள்! இது உங்கள் அனுபவத்தை மாற்றும் H-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது – நீங்கள் அதைத் திறக்கும் தருணத்திலிருந்து!
மேலும் தகவலுக்கு, தயவுசெய்து எங்களுக்கு +919311340947 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பை வழங்கவும் அல்லது எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். pic.twitter.com/mW4SrRjPqd
— ஹோண்டா 2 வீலர்ஸ் (@honda2wheelerin) ஜனவரி 23, 2023