
மெட்ரோ நகரங்கள்
இந்தியாவின் ஏழு பெரிய மெட்ரோ நகரங்களில், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டு வாடகைகள் சராசரியாக 20%-25% உயர்ந்துள்ளன. மேலும் சில பிரபலமான மற்றும் பெரிய ஹவுசிங் அமைப்பில் 30% அதிகமான உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனரோக் தெரிவித்தார்.

ஹைப்ரிட் கலாச்சாரம்
இந்தியா முழுவதும் அனைத்துத் துறை நிறுவனத்திலும் ஹைப்ரிட் கலாச்சாரம் நடைமுறைக்கு வந்த நிலையில் பெரு நகரங்களில் வசதி மற்றும் பெரிய வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதனாலேயே வீட்டு வாடகைகள் அதிகரித்துள்ளது.

வீட்டு விலைக் குறியீடு
வீடு விற்பனை அளவுகள் மற்றும் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கியால் தொகுக்கப்பட்ட வீட்டு விலைக் குறியீடு (வீட்டு விலைக் குறியீடு), கடந்த ஆண்டு செப்டம்பர் உடன் முடிந்த காலாண்டில் 10 வருடத்தில் அதிகபட்ச உயர்வை பதிவு செய்யப்பட்டது.

வீடுகளின் விலை
இந்தியாவின் டாப் ஏழு நகரங்களான NCR, கொல்கத்தா, மும்பை பெருநகரப் பகுதி, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் சராசரி வீடுகளின் விலை 4%-7% அதிகரித்துள்ளது என்று அனரோக் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒரு வருட உயர்வில் இருக்கும் உணவு விலை பணவீக்கத்தைப் போராடி வரும் நிலையில் தற்போது 3 வருட உயர்வில் இருக்கும் வீட்டு வாடகைகள் மற்றும் அதன் துணை செலவுகள் பெரும் தலைவலியாக ரிசர்வ் வங்கிக்கு மாறியுள்ளது.

இரண்டாம் வரிசை விளைவுகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார், வீட்டுவசதி விலை உயர்வு என்பது இரண்டாம் வரிசை விளைவுகளாக இருக்கும் வேலையில் இதன் பாதிப்புகள் மற்றும் சந்தை போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம்
நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம் (நகர்ப்புற வீட்டு பணவீக்கம்) 2022 டிசம்பரில் 4.47 சதவீதம் உயர்ந்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே புள்ளி 3.61 சதவீதமாக இருந்தது. 2020 டிசம்பரில் இது 3.21% ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

3 வருட உச்சம்
அக்டோபர் 2022ல் நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம் 4.58% ஆக இருந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பரில் சிறிதளவு இருந்தாலும், 2019க்குப் பிறகு அதிகபட்ச அளவுகள் குறைந்துள்ளது.

சில்லறை பணவீக்கம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் மாதம் 5.72% ஆகக் குறைந்துள்ளது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 2-6 சதவீத இலக்கிற்கு மேல் இருந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 6 சதவீதத்திற்கு கீழே இருந்தது.