
தியானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளித்து, பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. பல விதமான தியான முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் உடலில் உள்ள ஏழு சக்கரங்களை சரி செய்து, சமநிலைப்படுத்துவது. இந்த சக்கரங்கள் சமநிலை தவறினால், அல்லது செயல்படாமல் இருக்கும் போது, நோய் மற்றும் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
உடலில் உள்ள ஒவ்வொரு சக்ரா, அதாவது ஆற்றல் மையமும் ஒவ்வொரு நிறத்துடன், ஒவ்வொரு உடல் உறுப்புடன் மற்றும் ஒவ்வொரு உணர்வுடன் தொடர்புடையவை. உடலின் சக்கரங்களை எவ்வாறு பேலன்ஸ் செய்து, ஆக்டிவேட் செய்வது என்பதற்கான தியான முறை மற்றும் வழிகாட்டுதல்கள் இங்கே.
சக்ரா தியானம் செய்வதால் எப்படி பலன் கிடைக்கும்..?
உடலில் உள்ள 7 சக்கரங்கள், மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் ஆகியவை ஆகும்.
- மூலாதார சக்கரம் – ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புக்கு இடையில் உள்ளது
- ஸ்வாதிஷ்டான சக்கரம் – பிறப்புறுப்புக்கு கொஞ்சம் மேலே இருக்கிறது
- மணிபூரகம் – தோப்புளுக்கு சற்று கீழே உள்ளது
- அனாஹதம் – விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு கொஞ்சம் கீழே இருக்கிறது
- விஷுத்தி – தொண்டை குழியில் இருக்கிறது
- ஆக்னா – புருவ மத்தியில் உள்ளது
- சகஸ்ராரம் – உச்சந்தலையில் உள்ளது.
உடலில் இருக்கும் ஆற்றல் மையங்களில் ஏதேனும் தடைகள் இருந்தால், அவை உடல் மற்றும் மன ரீதியான சமநிலையை பாதிக்கிறது. எனவே நீங்கள் சக்ரா தியானம் செய்யும் போது, ஏதேனும் ஒரு சக்கரத்தில் கவனம் செலுத்தி தியானம் செய்தால் அதை ஆக்டிவேட் செய்து, அந்த சக்கரத்தின் ஆற்றலைப் பெற முடியும். மேலும், குறிப்பிட்ட சக்கரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளால் உண்டான நோய் அல்லது குறைபாடுகளும் சரியாகும். உதாரணமாக, ஹார்ட் சக்ரா எனப்படும் இதய ஆற்றல் மையத்தில் கவனம் செலுத்தி தியானம் செய்யும் போது, உணர்ச்சிபூர்வமான பாதிப்புகள் சீராகும், மனம் சமநிலை அடையும்.
சக்ரா தியானம் செய்வது எப்படி..?
ஏழு சக்கரங்களைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு, எந்த சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு சக்ராவில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
அமைதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும், எந்த இடமாகவும் இருக்கலாம். மொபைல் ஃபோன் உட்பட எந்த விதமான தொந்தரவும் இல்லாமல், தனியே இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!
தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
இந்த 7 சக்ரா தியானத்தை நின்றபடி, படுத்த வாக்கில் அல்லது வசதியாக அமர்ந்தவாறு என்று எப்படி வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.
கண்களை மூடிக் கொண்டு, தசைகளை தளர்வாக்க ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். உடலின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலில் எந்த சக்கரம் பாதிப்படைந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க இது அவசியம்.
ஒருவேளை உங்களால் கண்டறிய முடியவில்லை என்றால், 7 சக்கரங்களின் மீதும் கவனம் செலுத்தலாம். ஆனால், எப்போதும் மூலாதார சக்ராவில் இருந்து தொடங்கி, உச்சியில் இருக்கும் சக்ராவுடன் முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு சக்ராவுக்கும் ஆற்றலை அதிகரிக்க வேண்டி, தேவையான டிஸ்க் அல்லது பூக்களாக நினைத்துக் கொள்ளுங்கள். நிதானமாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து விட்டு, ஒவ்வொரு சக்ராவிலும் ஆற்றல் நிறைவதாக எண்ணிக் கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது, சக்ராவில் உள்ள அழுத்தம், இம்பேலன்ஸ் என்று எல்லாம் வெளியேறுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதை நான்கு, ஐந்து முறை செய்த பின்பு, அடுத்த சக்ராவுக்கு செல்லுங்கள்.
ஒவ்வொரு சக்ராவும் சரியான முறையில் (கடிகார திசையில்) சுழல்வதாக சிந்தித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். இவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள சக்கரங்கள் சீராக, சரியான திசையில் சுழலும், உடல் ரீதியான பாதிப்புகள் சரியாகும்.
7 சக்கரங்களுக்கும் இவ்வாறு செய்த பின்னர், சில நிமிடங்கள் நிதானமாக மூச்சை சுவாசித்து வெளியேற்றிய பின், மெதுவாக கண்களை திறந்து, தியானத்தை நிறைவு செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: