
கடந்த ஆண்டு நிலவரம்
நிறுவனத்தின் லாபம் 2243 கோடி ரூபாய் கடந்த ஆண்டு கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லாபமானது ப்ளூம்பெர்க் ஆய்வில் 2497.90 கோடி ரூபாயாக இருந்தது.
சர்வதேச நுகர்வோர் நிறுவனமான இந்த நிறுவனத்தின் வருவாயும் இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 16% அதிகரித்து, 14,986 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 12,900 கோடி ரூபாயாக இருந்தது.

மார்ஜின் சரிவு
வருவாய் விகிதம் அழகு மற்றும் பர்சனல் கேர் துறை, ஹோம் கேர் என பலவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதுவே இதன் வருவாய் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.
இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிறுவனம், பணவீக்கத்தின் தாக்கமும் உள்ளது. இதற்கிடையில் இதன் எபிட்டா நிறுவனத்தின் வட்டி பிந்தைய வருவாய், வரி, தேய்மானம் சேர்த்து 3537 கோடி ரூபாயாக இருந்தது. இதன் எபிட்டா மார்ஜின் விகிதம் 23.6% ஆக குறைந்துள்ளது.

பிரிவு வாரியாக வளர்ச்சி
பிரிவு வாரியாக பார்க்கும்போது ஹோம் கேர் பொருட்கள் பிரிவில் 32% வளர்ச்சியும், இதே அழகு மற்றும் பர்சனல் கேர் பிரிவில் 10% வளர்ச்சியும் கண்டுள்ளது.
இதற்கிடையில் உணவு மற்றும் புத்துணர்ச்சி தரும் பொருட்கள் பிரிவில் வளர்ச்சி விகிதமானது 7% ஆகவும் இருந்தது. இதில் உணவுகள், காபி மற்றும் ஐஸ்கிரீம் பிரிவு வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.

விரிவாக்க நடவடிக்கை
தொடர்ந்து எங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிறுவனம், பிரான்சிசி வாய்ப்பு, நல்ல மார்ஜின் விகிதம் என பலவற்றில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில் தேவையானது படிப்படியாக மெதுவாக இருக்கலாம். தேவையிலும் சற்று மெதுவான ஏற்றம் இருக்கலாம்.

ஒப்புதல்
தனித்தனியாக 2022ம் நிதியாண்டில் ராயல்டி மற்றும் மத்திய சேவைக் கட்டணங்கள், சுமார் 2.65% இல் இருந்து, 3.45% ஆக அதிகரிக்க ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிறுவன வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய பங்கு விலை
என்.எஸ்.இ-யில் ஹெச் யு எல் பங்கின் விலையானது 1.36% குறைந்து, 2649.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதன் உச்ச விலை 2679.30 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2611.90 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.ஐ-யில் இதன் பங்கு விலையானது 1.36% குறைந்தது, 2650.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதன் இன்றைய உச்ச விலை 2678.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2612.10 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2741 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1901.80 ரூபாயாகவும் உள்ளது.