
ஹூண்டாய் நிறுவனம், கிராண்ட் ஐ10 நியாஸ் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் எரா, மக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா என 4 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.5.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தைப் பொறுத்தவரை, முன்புற கிரில் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்புற பம்பருடன் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள், புதிய எல்இடி டெயில் லாம்ப், 15 அங்குல டயமண்ட் கட் அலாய் வீல் ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குரூஸ் கண்ட்ரோல், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 2 வித இன்ஜின்கள் உள்ளன. ஹூண்டாவின் பிரத்யேகமான 1.2 லிட்டர் கப்பா கேசோலின் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும் 113.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 95.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.