
சென்னை: பல்வேறு கலாச்சார முக்கியத்துவங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் மொழி ஊடகமாகும். தண்ணீரின் சுவை ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுவதைப் போல இந்தியாவில் சில கி.மீ. தொலைவிலேயே பேச்சு மொழியில் மாற்றங்கள் இருப்பதைக் காணலாம்.
கார்களை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இதைப் புரிந்துகொண்டு செயல்படுவது இன்றியமையாததாகும். நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹண்டாய் இதைப் புரிந்துகொண்டு, அந்தந்த பகுதியின் சமூக கலாச்சாரத்திற்கு ஏற்ப பல சந்தைப்படுத்துதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.