
ஐபிஎம் நிறுவனம்
ஐபிஎம் நிறுவனத்தின் சிஐஓ-வாக அரவிந்த் கிருஷ்ணா பதவியேற்ற நாளில் இருந்து நிர்வாகம் முதல் வர்த்தகம் வரை பல மாற்றங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது ரெசிஷன் அச்சம் நிறைந்த நிலையில் தனது சக போட்டி நிறுவனங்கள் எடுத்த அதே முடிவை ஐபிஎம் எடுத்துள்ளது.

3900 ஊழியர்களைப் பணிநீக்கம்
புதன்கிழமை ஐபிஎம் வெளியிட்ட அறிவிப்பில் நிறுவனத்தின் சில சொத்து விற்பனை மற்றும் மறுசீரமைப்பு காரணமாக 3900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐபிஎம் இந்த முக்கியமான டிசம்பர் காலாண்டில் கேஷ் டார்கெட்-ஐ அடைய முடியாமல் போன வேலையிலும், வருமான எதிர்ப்புகளைப் பெரிய அளவிலும் குறைந்துள்ளது.

300 மில்லியன் டாலர் செலவு
இந்தப் பணிநீக்கம் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் அளவிலான கூடுதல் செலவுகள் ஜனவரி – மார்ச் காலாண்டில் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான வாட்சன் ஹெல்த்-ன் Kyndryl வர்த்தகத்தை விற்பனை செய்த காரணத்தால் தற்போது 390 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஐபிஎம் பங்குகளும் 2 சதவீதம் சரிந்துள்ளது.

கேஷ் புளோ டார்கெட்
2022 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் கேஷ் புளோ 10 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது, தற்போது 9.3 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் இலக்கை அடைய முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் ஐபிஎம் நிர்வாகம் Kyndryl வர்த்தகத்தை ஸ்பின்ஆப் செய்வதன் மூலம் ஈடுபடுத்தப்படுகிறது.

டிஜிட்டல் சேவை டிமாண்ட்
இதேபோல் பின் உலகம் முழுவதிலும் டிஜிட்டல் சேவைக்கான டிமாண்ட் அதிகரித்த வேலையில் தற்போது ரெசிஷன் காரணமாக டிஜிட்டல் சேவைகள் செலவு செய்யும் அளவுகள் மிகவும் எச்சரிக்கையாகச் செய்யப்படுகின்றன.

கிளவுட் சேவை பிரிவு
இதன் மூலம் 4வது காலாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சாப்ட்வேட் மற்றும் கான்சல்டிங் வர்த்தகத்தின் வளர்ச்சி 4வது காலாண்டில் மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆனால் கிளவுட் சேவை பிரிவில் ஐபிஎம் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிக வர்த்தகத்தைப் பெறுகிறது. குறிப்பாக அமேசான்.காம்-ன் AWS மற்றும் மைக்ரோசாப்ட் AZURE ஆகியவற்றுடன் ஒப்பந்தம் பெரிய அளவில் உதவியுள்ளது.

வருவாய் வளர்ச்சி
ஆனால் 2022 ஆம் ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 5.5 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்தது. இது டிசம்பர் காலாண்டில் வெறும் 2 சதவீத உயர்வுடன் 16.69 பில்லியன் டாலராக இருந்தது. 2022 ஆம் ஆண்டு வருவாய் தான் இந்தத் தசாப்தத்தின் உச்ச அளவாகும்.