
மதுரை: வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்க பயன்படும் சட்டப் புத்தகங்களை தமிழில் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சட்டக் கல்லூரி உள்பட கல்லூரிகளின் பாடப் புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.