
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சிஆர்பிஎப் துணை ராணுவ பாதுகாப்பு படையில் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சிஆர்பிஎப் துணை ராணுவ பாதுகாப்பு படையில் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ASI(Stenographer)
காலியிடங்கள்: 143
சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதி அதனை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Head Constable(Ministerial)
காலியிடங்கள்: 1315
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ, விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், பெண்கள் 155 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.1.2023
Source link