
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 6:04 மணிக்கு சனிபெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த ஆண்டு, பெரிய கிரகங்கள் என்று கூறப்படும் சனி, ராகு, கேது, குரு என்று எல்லா கிரகங்களுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றன.
சரி கிரகங்களின் பெயர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், புதிய வீடு, வாகனம், வாங்கும் ஆசை பலருக்கும் இருக்கும். இந்த ஆண்டாவது புதிய வாகனம் வாங்க முடியுமா, அமையுமா ஒரு சிலர் நினைக்கலாம். புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்களுக்கு புதிய கார், புதிய பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களுக்கு, இந்த ஆண்டு எவ்வளவு யோகமான ஆண்டாக இருக்கப் போகிறது, யாருக்கெல்லாம் வண்டி, வாகன யோகம் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
எல்லாராலும் எளிதாக கனிசமான தொகையை ரொக்கமாக கொடுத்து காரையோ பைக்கையோ வாங்க முடியாது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கு நேரம் கூடி வர வேண்டும். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு புதிதாக வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பொதுவாக இந்த யோகம் என்பது கிரகங்களின் பயிற்சியின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து அவரவர் சொந்த ஜாதகத்தில் வாகனம் வாங்கும் யோகம், பல வாகனங்கள் வைத்திருக்கும் யோகம் இந்த ஆண்டு அவர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு செல்லும் என்று கூறும் அளவுக்கு வாகனங்களுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
மேஷ ராசி:
2023 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிக மிக யோகமான ஆண்டாக அமைய இருக்கிறது. லாப ஸ்தானத்தில், ஆட்சி பெற்ற சனியும், ராசியிலேயே குரு ராகுவும் இருப்பதால் இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், வருமானம் அதிகரிக்கும், வணிகத்தில் லாபம் கொழிக்கும். எனவே புதிய வாகனம் வாங்குவது என்பது அவர்களுக்கு ஒன்றும் சிரமமில்லை.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்கள், இவ்வளவு காலம் இதற்குத்தான் காத்திருந்தேன் என்று கூறும் அளவிற்கு வேலையும், வணிகமும், தொழிலிலும் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி காண்பார்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானமும், பதவி உயர்வு எல்லாமே கிடைக்கும். கும்ப ராசியில் ஆட்சியாக பத்தாம் வீட்டில் அமரும் சனி பகவான் தொழிலை மேம்படுத்துவார். இந்த ஆண்டு கடினமான உழைப்பின் மூலம் நிறைய பணம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை ரிஷப ராசியின் நான்காம் வீடான சிம்மத்தில் விழுகிறது. குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்று கூறப்படுவது போல் நான்காம் வீடு என்பது வாகன யோகத்தை குறிக்கும். எனவே மே மாதத்துக்குப் பிறகு ரிஷப ராசியினர் வாகனம் வாங்கும் யோகம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
மேலும், விரைய குருவாக, குரு பெயர்ச்சி நடைபெறுவதால், வாகனத்தில் முதலீடு செய்து தேவையற்ற செலவைக் குறைக்கலாம்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இல்லை என்று கூறினாலும் மிகப்பெரிய கெடுதல் இல்லாத ஆண்டாக அமைகிறது. இதைத் தவிர்த்து குருவின் பார்வை சிம்ம ராசியில் விழுவதால், இவர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். எனவே நீண்ட காலமாக புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு மே மாதம், ஜூன் மாதம், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்கள் இவர்களுக்கு வாகனம் வாங்குவதற்கு சாதகமான மாதங்கள் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
மகர ராசி:
மகர ராசியினருக்கு ஜென்ம சனி விலகி, ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி அடுத்த இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு என்பதால் சனி கொட்டிக் கொடுத்துவிட்டு செல்லும் என்பதற்கு ஏற்றவாறு இந்த இரண்டரை ஆண்டு காலம் நீங்கள் எந்த ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும். வாகனம் வாங்க விருப்பம் இருப்பவர்கள் அதை செயல்படுத்தலாம்.
கும்ப ராசி:
கும்ப ராசி ஜென்ம சனி தொடங்கியிருக்கிறது, எனவே கும்ப ராசிக்காரர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஏழரை சனி என்றாலே பயப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏழரை சனி காலத்தில் ஒரு நபரின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள், எதிர்காலத்தில் அவர்கள் திரும்பி பார்க்கும் பொழுது இந்த காலம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும். எனவே ஏழரை சனி காலத்தில் நேர்மையாக, எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் நற்பலன்களை பெறுவீர்கள்.
ஜென்ம சனியால் கும்ப ராசியினருக்கு வாகன யோகம் தவிர திருமண யோகமும் உள்ளது. எனவே புதிய வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் ஏப்ரல் மற்றும் மே, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் வாங்கலாம் என்று ஜோதிட வல்லுநர்கள் பதிவு செய்கிறார்கள்.
எல்லா ராசிக்காரர்களுக்கும் வாகன யோகம் இருக்குமா என்றால், ஒரு சில ஜாதகங்களில் அவர் சொந்தமாக வாகனம் வாங்க முடியாது, சொந்தமாக வீடு வாங்க முடியாது என்பது போன்ற அமைப்புகள் இருக்கும். அத்தகைய ஜாதகருக்கு, இவ்வாறு பெயர்ச்சி காலங்களில் வாகனம் வாங்குவதற்கான அமைப்பும் யோகமும் ஏற்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.