
புதுடெல்லி: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் விதிமுறைகள் எளிமை மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க தேவையான நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்ப்பதாக மருந்துத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய மருந்தியல் கூட்டமைப்பின் (ஐபிஏ) பொது செயலர் சுந்தரம் ஜெயின் நிறுவனம்: உள்நாட்டு மருந்து வர்த்தகம் தற்போது 50 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.4 லட்சம் கோடியாகும். இது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 130 பில்லியன் டாலராகவும், 2047-க்குள் 450 பில்லியன் டாலராகவும் அதிகரிக்க வேண்டும் என்பதே மருந்து துறை கூட்டமைப்பின் விருப்பம் மற்றும் இலக்காக உள்ளது.
இந்த இலக்கை அடையும் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான நிதி சார்ந்த திட்டங்களை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக, மருந்துத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகள், ஜிஎஸ்டி விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இத்தகைய அறிவிப்புகள் இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சியில் கவனிக்கத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.
ஐபிஏ என்பது சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேப், அரபிந்தோபார்மா, சிப்லா, லூபின், கிளென்மார்க் உள்ளிட்ட 24 முன்னணி உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.
நோவார்டிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமிதாப் துபே கூறினார், “உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தைப் போலவே, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
சுகாதாரத் துறையைப் பொருத்தவரை உள்கட்டமைப்பு திறன்களைஉருவாக்குவது இன்றியமையாதது. இதனால், மக்களுக்கு தரமான, முக்கியமான சுகாதார சேவைகள் கிடைப்பது சாத்தியமாகும். எனவே, புற அடுக்கு நகரங்களில் மருத்துவமனைகளை அதிகரிக்க தேவையான நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என தேசிய சுகாதார அமைப்பின் தலைவர் ஷ்ரவன் சுப்ரமணியம் தெரிவித்தார்.