
நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்டாட்டம் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரை வென்றால் தான் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நாக்பூரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.
இதனால் இந்திய அணி அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களின் மிகப்பெரிய பலம், அவர்களுக்கு பந்துவீசுவதற்கும், விக்கெட் பெறுவதற்கும் சிறந்த சூழ்நிலையை நாங்கள் வழங்க வேண்டும். நிச்சயமாக, போட்டியின் முந்திய நாளிலோ அல்லது காலையில் பிட்ச்சை பார்வையிட்ட பிறகு ஆடும் லெவனை தேர்வு செய்வோம். ஆனால் நான்கு ஸ்பின்னர்கள் நிச்சயமாக எங்கள் திட்டத்தில் உள்ளனர், ஏனெனில் எங்களிடம் நான்கு தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர், என இந்திய அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன்லயன் பவுலிங்கை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியாளர் டிராக்ட ஆலோசனை படி அவர்கள் ஸ்வீப் ஷாட் பயிற்சியில் சேர்க்கப்பட்டார்.